நித்தியகடன் நவம்பர் 23 2020

☀️🌊☀️🌊☀️🌊☀️🌊☀️🌊☀️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 23*

☀️🌊☀️🌊☀️🌊☀️🌊☀️🌊☀️

🌳 *இன்றைய நித்தியகடன்*

🌳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌳 *இன்றைய சாதகம்*

🌳 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🌳 *இன்றைய நற்சிந்தனை*

🌳 சூரியனிலிருந்து வெளிவரும் காந்த ஒளி, நீர் மீது விழும்போது நீரானது வெப்பமாக மாறி, மேலும் அதிகரிக்க அதிகரிக்க ஆவியாக மாறி காற்றில் கலக்கிறது. அதே சூரிய ஒளி ஒரு பச்சை களிமண் பொம்மை மீது விழும்போது, அந்த களிமண்ணானது இறுகி வலிமை பெறுகிறது. சூரிய ஒளி ஒன்றுதான்... ஆனால் அது எந்த பொருள் மீது விழுகிறதோ, அதற்கு தக்கவாறு விளைவுகள் வேறுபடுகின்றன. இது போலத்தான் நம் மனமும்.

🌳 *இன்றைய தற்சோதனை*

🌳 மனம் எதனோடு சேர்க்கிறதோ, அதனுடைய தன்மையைப் பெற்று தானும் அதுவாகிறது. மனதிற்கு என்று தனியாக ஒரு சிறப்பு நிலை இல்லை. அப்படி இருப்பதாக நாம் எடுத்துக் கொண்டால் அது மனம் எதனோடு சேர்க்கிறதோ மனம் அதுவாகிவிடும். இதுவே தான் மனதினுடைய சிறப்பு. இவ்வாறான மனதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், என்று சிந்தித்து தற்சோதனை செய்து பாருங்கள்.

🌳 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌳 "தீதும் நன்றும் பிறர் தர வாரா, யாதும் ஊரே யாவரும் கேளிர்" கவிஞர் பூங்குன்றனாரின் இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப உங்களுடைய, மனதின் போக்கிடத்தை நீங்கள்தான் முடிவு செய்து, நன்மையையும் தீமையையும் பகுத்து ஆராய்ந்து எதனோடு, மனதை இணைத்து இயக்க வேண்டும், என்பதில் முடிவு செய்து கொண்டு முடிவெடுத்த நிலையில், வாழ்வை வாழும் போது அதுவே ஞான வாழ்வாகும். வாழ்க வளமுடன்...

🌳 *இன்றைய மூலிகை*

🌳 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🌳 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🌳 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🌳 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌳 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌳 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌳 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments