நித்தியகடன் நவம்பர் 22 2020

♾️💥♾️💥♾️💥♾️💥♾️💥♾️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 22*

♾️💥♾️💥♾️💥♾️💥♾️💥♾️

♻️ *இன்றைய நித்தியகடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ காற்று வீசும் திசையெல்லாம் தூசி, துகள்கள் செல்லும். மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடும். இது போல் மனம் இறைவனை நோக்கி செல்கிறது. தன்னுடைய மூலத்தை நோக்கி நகரும் இறைவனுடைய, இக்கோட்பாட்டை சிந்திப்பாய் மனமே. இந்த இயற்கையின் நீதிக்கு இடையூறாக இருப்பதை, ஒன்று அது கடக்க முயற்சி செய்கிறது, அல்லது தகற்க முயற்சி செய்கிறது.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ இந்த போராட்டமானது நம் உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறுகிறது. இதன் விளைவாக உடலில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவைகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனை மனம் பொருந்தா உணர்வாகவும் ஒவ்வாமை ஆகவும் சிந்திக்கிறது. இதனை சரி செய்து கொள்ள வேண்டுமானால் முறையான தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் என இவை அனைத்தையும் நாள் தவறாமல் செய்து வர வேண்டும்.

♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♻️ இந்த உண்மையை சரியாக புரிந்து கொண்டு முழுமையாக தற்சோதனையில், நம்மை ஈடுபடுத்திக் கொண்டு கடப்பதை கடப்போம், தகர்ப்பதை தகர்ப்போம். கடப்பதற்கும், தகர்ப்பதற்கும் விட்டுக்கொடுத்தல், தியாகம், சகிப்புதன்மை இப் பண்புகளெல்லாம் ஒருங்கிணைந்த மனப்பக்குவத்தில் தேர்வோம். தேவையற்றதை தவிர்ப்போம். வாழ்க வளமுடன்...

♻️ *இன்றைய மூலிகை*

♻️ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

♻️ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments