நித்தியகடன் நவம்பர் 19 2020

❄️♨️❄♨❄♨❄♨❄♨❄

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 19*

❄️♨️❄♨❄♨❄♨❄♨❄

💐 *இன்றைய நித்தியக்கடன்*

💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💐 *இன்றைய சாதகம்*

💐 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

💐 *இன்றைய நற்சிந்தனை*

💐 இயற்கையின் மிக நுட்பமான மெல்லிய தன்மாற்றம் மனிதன். இந்த மனித இனத்திற்கு அளவற்ற ஆற்றலும் திறமையும் மனம், உயிர், அறிவு இவைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் எல்லாவகையான சுதந்திரமும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தன்னுடைய ஆர்வத்தை எதன் மீது வேண்டுமானாலும் செலுத்தி, அதில் அவர்களால் முன்னேற்றம் காணமுடியும். மனிதனுடைய பலவீனமும் பலமும் இதுதான். அவர்களுக்கு உள்ளமைப்பாய் அமைந்துள்ள சுதந்திரம்.

💐 *இன்றைய தற்சோதனை*

💐 இந்த உடல், மனம், அறிவு இவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், என்று தெரிந்து கொண்டு அதன்படியே வாழ்வதற்கு மனிதன் முயற்சி செய்யும் அந்த நொடிப் பொழுதில், மனிதனுடைய ஆற்றலும் திறமையும் அவனிடமிருந்து வெளிப்படும். இயற்கை என்ற இறைவன் மனிதனுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தை, முறை மாறாமல் அளவு மீறாமல்  வாழ்வதற்கு எடுக்கும் முயற்சிதான் ஆன்மீகம்.தன்னை தானே அறிந்து கொள்வதும், தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தி தன்னுடைய அகம்புறம் அனைத்தையும், புரிந்து கொள்வதற்கு ஆன்மீக வாழ்வு என்று பெயர்.

💐 *இன்றைய பண்புப்பயிற்சி*

💐 எல்லோரும் வாழ்கிறார்கள் இன்ப துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் யாரோ ஒருவருக்குத் தான் இது எல்லாம் ஏன்? எதனால்? எதற்கு நடைபெறுகிறது? என்ற கேள்விக்கு விடையை தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறான கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு பயணம், அதுவே மனிதன் வாழ வேண்டிய பேரின்ப ஆன்மீக பயணமாகும். இந்த பயணமானது ஊர் ஊராக, நாடு நாடாக, அல்ல நம்மை நாமே கடந்து கடைநிலையாக உள்ள இறைவனோடு கலப்பதே ஆன்மீகப் பயணம். வாழ்க வளமுடன்...
💐 *இன்றைய மூலிகை*

💐 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

💐 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

💐 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்*.

💐 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*.

💐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments