♾️♻️♾️♻️♾️♻️♾️♻️♾️♻️♾️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 16*
♾️♻️♾️♻️♾️♻️♾️♻️♾️♻️♾️
🎲 *இன்றைய நித்தியகடன்*
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎲 *இன்றைய சாதகம்*
🎲 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎲 *இன்றைய நற்சிந்தனை*
🎲 தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத் தூண்டுதல், கருவமைப்பு, தெய்வீகம் இந்த ஆறு வகைகாரணங்களால் எண்ணங்கள் எழுகின்றன. இதனுடைய பின் விளைவு என்ன என்பதை ஆராயாமல் எழுகின்ற எண்ணங்களுக் கெல்லாம் நாம் செயல் வடிவம் கொடுக்கின்ற காரணத்தால் இதுநாள்வரை நம்முடைய வாழ்க்கை பல திசைகளிலும் பிரிந்து, சிதைந்து, திசை தெரியாமல் பயணித்து வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கி கொண்டிருப்பதற்கு இதுவே மூல காரணமாகும். மேலும் ஆராய்வோம்...
🎲 *இன்றைய தற்சோதனை*
🎲 மனதின் வழியாக நாம் எது மாதிரியான உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றோமோ உணருகின்றோமோ, அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றமானது நம் உடலுக்கும், மனதிற்கும், சாதகமாகவும், பாதகமாகவும் அமைவதற்கு வாய்ப்பு உண்டு. மனிதர்களான நமக்கு பொருத்தமில்லாத போலி எண்ணங்களை உருவாக்கி, நம்முடைய சொந்த எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் நம் மனதின் வழியாக ஆளுமை செலுத்தும்.
🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎲 உடலிலும் மூளை செல்களிலும் ரசாயன குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கு தினமும் நிதானமாக உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை செய்து வாழ்க்கையின் சூழ்நிலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றையும் சிந்தித்து ஆராய்ந்து வாழக்கூடிய பண்பில், நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும்போது நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட முடியும். இதுவின்றி நம்முடைய எண்ணங்களை சீரமைத்துக் கொள்ள வேறு வழிமுறையே இல்லை. பயிற்சிகள் செய்யாமல் தப்பிப் பிழைத்து ஓடுவது ஒருநாளும் நல்ல வழிமுறை கிடையாது. வாழ்க வளமுடன்...
🎲 *இன்றைய மூலிகை*
🎲 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🎲 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🎲 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment