🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 14*
🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 இன்று சனிக்கிழமை அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 எத்தனையோ பழங்கள் இருக்கும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் துரியாதீத தீட்சை பெற்ற அன்பர்களுக்கு ஞான கனியாக ஏன் வாழைப்பழத்தை வழங்குகிறார்கள்? என்றால்... வாழைமரத்தில் வாழைப்பூவாக இருக்கும்போது அந்தப் பூ கீழ்நோக்கி இருக்கும் அது காயாகி கனியாக மாறும் போது மேல்நோக்கு தன்மைக்கு மாறிவிடும். கீழ்நோக்கு தன்மையோடு வந்து மேல்நோக்கு தன்மைக்கு மாறக் கூடிய சிறப்பு, இந்த வாழைப்பழத்திற்கு இருப்பதனால் ஆசான் அவர்கள் இதை ஞானக் கனியாக தேர்ந்தெடுத்து, துரியாதீத தீட்சையின் போது அன்பர்களுக்கு அன்போடு வழங்குகிறார்கள்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 இந்த வாழைப்பழம் போல நாமும் கீழ்நோக்கு தன்மையோடு பிறந்து மேல்நோக்கு தன்மைக்கு உயர்வு பெற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு இந்த துரியாதீத தவம் பேருதவியாக இருக்கும். அது மட்டுமின்றி கூடவே அதனோடு இணைந்து வழங்கப்படும் இந்த ஞானக்கனியும் அதற்கு உதவியாக அமையட்டும் என்ற, ஆழ்ந்த விஞ்ஞான சிந்தனையோடு இந்த மெய்ஞான கனியை அருள் நிலையோடு வழங்குகிறார்கள். இதை நன்கு தற்சோதனை செய்து புரிதலை ஏற்படுத்திக் கொண்டு முயற்சிப்போம்.
🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎱 இந்த வாழைப்பழம் எப்படி மேல்நோக்கு தன்மையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, கனியாகி தனக்கும் தன்னை சார்ந்த மற்ற ஜீவன்களுக்கும் பயன்பாடாக அமைந்ததோ, அது போல நாமும் ஞானத்தை உணரக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறோம். இதை சிறந்த முறையில் பயிற்சி மூலமாக முயற்சித்து, மேலும் ஞான தன்மையில் நிறைவான ஒரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி நாமும் நம் குடும்பமும் தழைப்போமாக. வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎱 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment