🌏💢🌏💢🌏💢🌏💢🌏💢🌏
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 12*
🌏💢🌏💢🌏💢🌏💢🌏💢🌏
💧 *இன்றைய நித்தியகடன்*
💧 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💧 *இன்றைய சாதகம்*
💧 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💧 *இன்றைய நற்சிந்தனை*
💧 இந்த பூமியில் நீராக பட்டது பள்ளத்தில் ஓடியும், சமதளத்தில் தேங்கியும், நிலத்துக்குள் ஊடுருவியும், மேகங்களில் இருப்பாகியும், மரம், செடி, கொடி, இலைகளில் பச்சையமாகவும், பழங்களில் சாறாகவும், ஜீவ இனங்களுள் இரத்த, அமிலங்களாகவும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, ஓடித்திரிந்து ஊடுருவி வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் எடுக்கும் முயற்சிகளில் ஒரு சிறிய அளவு நாம் முயற்சித்தால் போதும், தன்னைத்தானே அறிவதற்கும், இறைநிலையை உணர்வதற்கும்...
💧 *இன்றைய தற்சோதனை*
💧 மனிதனுடைய பலமும் பலவீனமும், அவர்களுடைய நினைவுகள் தான். எதை மறக்க வேண்டுமோ அதை மறந்துவிட வேண்டும். எதை மறக்க கூடாதோ அதை மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆக முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மிடமே இருக்கிறது. இதற்கு துணையாக பயிற்சிகளை மேற்கொண்டால், இதை சுலபமாக செய்து முடித்துவிடலாம். அத்தகைய பயிற்சியைத் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பலவகையிலும் ஆய்வுசெய்து, ஆய்வின் முடிவாக மனவளக்கலையை அருளி இருக்கிறார்கள்.
💧 *இன்றைய பண்புப்பயிற்சி*
💧 தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல், வாழும் நெறி உணர்ந்து வாழ்வதற்கு உருவான பிறப்பு இது. இதற்கான சரியானதொரு பயிற்சி முறையில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்த சிறப்புமிக்க வாழ்க்கையை தானும் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கான, ஒரு பாலமாகவே நாம் நம்முடைய வரலாறை வாழ்ந்து எழுதி நிறைவு செய்வோம். *"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"* இக் குறளுக்கு ஏற்ப நாம் செய்ய வேண்டியதை, சரியாக செய்து வாழ்வோம் மற்றவர்களும் வாழ வழிவகை செய்வோம். வாழ்க வளமுடன்...
💧 *இன்றைய மூலிகை*
💧 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
💧 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
💧 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💧 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💧 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💧 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment