நித்தியகடன் நவம்பர் 11 2020

❄️☀️❄️☀️❄️☀️❄️☀️❄️☀️❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 11*

❄️☀️❄️☀️❄️☀️❄️☀️❄️☀️❄️

⌛ *இன்றைய நித்தியகடன்*

⌛ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

⌛ *இன்றைய சாதகம்*

⌛ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

⌛ *இன்றைய நற்சிந்தனை*

⌛ பஞ்சேந்திரிய தவம், பஞ்சபூத நவகிரக தவம், துரியாதீத தவம், ஒன்பதுமைய தவம், நித்யானந்த தவம், இறைநிலை தவம் இந்த தவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஞ்ஞான விளைவுகள் உண்டு. இந்த விஞ்ஞான விளைவுகளோடு நம்முடைய சிந்தனைகளை நிறுத்தி, இயக்கி, உயர்த்தி ஞானத்திற்கு நம்மை தயார் படுத்துவதே இந்த தவங்கள் உருவாக்கப்பட்டதினுடைய அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு தவங்களும் நமக்கு ஒவ்வொரு விதமான புரிதல்களை உருவாக்கிக் கொடுக்க வல்லதாகும்.

⌛ *இன்றைய தற்சோதனை*

⌛ ஆக்கினை தவம் மனதிற்கும் மனதிற்குமான நல்லிணக்கத்தை உருவாக்குகிறது. துரிய தவம் உயிருக்கும், இறைநிலைக்கும், மனதிற்குமான இணக்கத் தன்மையை உருவாக்குகிறது. பஞ்சேந்திரிய தவம் புலன்களுக்கும் மனதிற்கு மானிடத் தன்மையை உருவாக்குகிறது. பஞ்சபூத நவகிரக தவம் கொள்கையுடைய அலைகளுக்கும், பஞ்சபூதங்களுக்கும், நம் உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் இடையே இணக்க தன்மையை உருவாக்குகிறது. துரியாதீத தவம் சுத்த வெளியை நம்முடைய பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் எனும் இந்த மூன்று உடலையும் இறைநிலையையும் இணைப்பதற்கான நிகழ்ச்சியை நடத்துகிறது. 

⌛ *இன்றைய பண்புப்பயிற்சி*

⌛ ஒன்பது மைய தவம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களை தூய்மைப்படுத்தி ஞானநிலைக்கு முழு தகுதியையும் உருவாக்குகிறது. நித்யானந்த தவம் நம் உடலில் இருக்கக்கூடிய, தண்டுவடத்தையும், தண்டுவடம் சார்ந்த இயக்கத்தையும் மேல் நிலைக்கு உயர்த்தி ஞானத்தையும் வாழ்வையும் இணைக்கிறது. இறைநிலை தவம் நாம் வந்த கதையை வரலாற்றை நமக்கு நினைவுபடுத்தி மீண்டும் மூலத்தோடு நம்மை முழுமையாக இணைப்பதற்கான வாய்ப்பினை உருவாக்குகிறது. இந்த அனைத்து தவங்களையும் விஞ்ஞான விளைவுகளையும் உணர்ந்து கொண்டு செயலாற்றி உடல், மனம், உயிர், அறிவு இதன் மூலம் நிறைவாக நாமும் நம் குடும்பமும் வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...

⌛ *இன்றைய மூலிகை*

⌛ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

⌛ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

⌛ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⌛ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⌛ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⌛ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments