நித்தியகடன் நவம்பர் 09 2020

🎱🕯️🎱🕯️🎱🕯️🎱🕯️🎱🕯️🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 09*

🎱🕯️🎱🕯️🎱🕯️🎱🕯️🎱🕯️🎱

🔰 *இன்றைய நித்தியகடன்*

🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🔰 *இன்றைய சாதகம்*

🔰 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🔰 *இன்றைய நற்சிந்தனை*

🔰 கருமையம் தூய்மை பெறும் அளவிற்கும் முறைக்கும் ஏற்பவே நம்முடைய உடல் நலம், மன வளம், அறிவு வளம், இறைஞானம், முழுமைப் பேறு இவையெல்லாம் அமைகிறது. கருமையத்தின் தாங்கும் நிலைக்கு ஏற்பவே மூளை செல்கள் ஓங்கி இயங்கும். நாம் இதுவரை பெற்றதையும், இனி பெறவேண்டியதையும் நம்முடைய கருமைய தன்மையே தீர்மானிக்கிறது. கருமையத்தை தூய்மை செய்துவிட்டால், தூய்மையான பிரபஞ்ச காந்த சக்தியோடு இணைந்து ஒன்றி கலந்து  இயங்கும். இவ்வாறாக இயங்கும் நிலையை தான் அறிவின் முழுமை பேறு என்கிறோம்.

🔰 *இன்றைய தற்சோதனை*

🔰 இந்த அறிவின் முழுமைப் பேறு எனும் நிகழ்ச்சி, எந்த ஒரு சரீரத்தில் நடக்க வேண்டுமானாலும் அந்த சரீரத்தை அதற்காக தயார்படுத்த வேண்டும். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவு முறையை பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு வழிமுறைகளிலும் ஒவ்வொரு கணமும் உயர் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அகநோக்கு பயணம் செய்யவேண்டும்.

🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔰 செயலை செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு, என்பதை சிந்தனையில் வைத்துக் கொண்டு, இறைவன் வகுத்து வைத்துள்ள நீதியின் அடிப்படையில் நமக்கு விளைவுகள் அமைகிறது, என்பதை அன்போடு ஏற்றுக்கொண்டு எந்த ஒரு அவசரத்திற்கும், உணர்ச்சிவயத்திற்கும் இடம் கொடுக்காமல் முயற்சி செய்வோம். வாழ்க வளமுடன்...

🔰 *இன்றைய மூலிகை*

🔰 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🔰 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🔰 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🔰 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔰 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔰 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments