🍭🏜️🍭🏜️🍭🏜️🍭🏜️🍭🏜️🍭
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 08*
🍭🏜️🍭🏜️🍭🏜️🍭🏜️🍭🏜️🍭
🌐 *இன்றைய நித்தியகடன்*
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌐 *இன்றைய சாதகம்*
🌐 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌐 *இன்றைய நற்சிந்தனை*
🌐 தன்னார்வத்தோடு நாம் ஒன்றை தேடி பல வகையிலும் முயற்சி செய்கின்றோம். இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறலாம், வெற்றி பெறுவதற்கு காலதாமதமுமாகலாம். நம்முடைய தேடல் என்பது சூழ்நிலையால் கருமையத்திலிருந்து இறைநிலையால் தூண்டபட்டதாகும். பல காரணங்களால் இந்த தேடலுக்கான விடை கிடைப்பதில் தடைகளும் இடையூருகளும் அமையும். இருப்பினும் நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால்...
🌐 *இன்றைய தற்சோதனை*
🌐 அறநெறியைப் பின்பற்றி நாம் தேடும் எந்த ஒரு தேடலுக்கும் காலத்தால் சரியான விளைவு என்பது அமைந்தே தீரும். உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இந்த நான்கிலும் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளிலும் தன்னுடைய உடலை, மனதை, உயிரை வளமான நிலையிலேயே வைத்து பராமரித்து வாழும் எவர் ஒருவருக்கும், இந்த பிரபஞ்சவெளியில் இன்னொரு உண்மை பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உண்மை என்ன?
🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌐 நாம் ஒரு உண்மையை தேடுகிறோம், இந்த பிரபஞ்சத்தில் நம்மை ஒரு உண்மை தேடிக் கொண்டிருக்கிறது, நம்மை தேடி வரக்கூடிய உண்மைகளை நாம் ஈர்த்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு மகரிஷி அவர்கள் கூறிய வாழ்க்கைநெறியும் பயிற்சிமுறையும் சிறப்பானதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. இதற்காக நாம் பெரியதாக எதையும் செய்யவும் சிந்திக்கவும் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையை பிழையின்றி வாழ்ந்து உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை செய்து பழகி தானும் தன் குடும்பமும் சமுதாயமும் நலமுற வாழ தொண்டு செய்வேண்டும். வாழ்க வளமுடன்...
🌐 *இன்றைய மூலிகை*
🌐 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌐 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment