🎲🎯🎲🎯🎲🎯🎲🎯🎲🎯🎲
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 07*
🎲🎯🎲🎯🎲🎯🎲🎯🎲🎯🎲
🏕️ *இன்றைய நித்தியகடன்*
🏕️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🏕️ *இன்றைய சாதகம்*
🏕️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🏕️ *இன்றைய நற்சிந்தனை*
🏕️ மனிதனாக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இந்த கடமையினை எவர் ஒருவர் சரியாக சிந்தித்து உணர்ந்து செயல் புரிகிறாரோ, அவருக்கு உடலாலும், மனதாலும், உயிராலும் வாழ்க்கையில் எந்தவிதமான துன்பமும் இல்லாமல், இனிமையான ஒரு சூழ்நிலையோடு வாழ்க்கை பயணமானது இனிதே நடைபெறும். தனக்கு துன்பம் செய்து கொள்ளாத ஒரு தெளிவோடு, தனது செயல்களை ஒழுங்கமைத்து கொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கை முறையாகும்.
🏕️ *இன்றைய தற்சோதனை*
🏕️ அவரவர்களுடைய உடலிலும், மனதிலும், வாழ்க்கை சூழ்நிலைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவரவர்களுக்கு நிச்சயமாக விளக்கம் தெரிந்திருக்க வேண்டும். இந்த தெளிவு இல்லாமல் வாழ்க்கையை நிறைவாக வாழ முடியாது. தனக்கு நடைபெறக்கூடிய எந்த ஒன்றுக்கும் விளக்கம் தெரிந்து கொண்டு, அதன் பின் தொடர்ந்து செயல்களை செய்வது மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகும்.
🏕️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🏕️ தன்னுடைய உடலில் நடைபெறக்கூடிய உடல் விஞ்ஞானத்தையும் உடல் ஞானத்தையும் உணர்ந்து கொண்டு நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்ளும்போது தன்னளவில் தனக்குள் உள்ள, இறைநிலையை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. இதன் தொடர்ச்சியாக தன்நிறைவோடும், சுயகட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் வாழும் பண்பு மேலோங்கும். இதுவே இறைநிலையை உணர்வதற்கான அடிப்படை தகுதியாகும். வாழ்க வளமுடன்...
🏕️ *இன்றைய மூலிகை*
🏕️ *கரும்பு சாறு* கரும்பு சாறு இஞ்சி, எலுமிச்சை,( ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
🏕️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏕️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏕️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏕️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment