நித்தியகடன் நவம்பர் 04 2020

🌏🌌🌏🌌🌏🌌🌏🌌🌏🌌🌏

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 04*

🌏🌌🌏🌌🌏🌌🌏🌌🌏🌌🌏

🔥 *இன்றைய நித்தியகடன்*

🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🔥 *இன்றைய சாதகம்*

🔥 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🔥 *இன்றைய நற்சிந்தனை*

🔥 இன்று நாம் காணும் எந்த ஒரு நிறுவனமானாலும் அமைப்பானாலும் இயக்கமானாலும் ஆரம்ப காலகட்டத்தில், அதனுடைய வளர்ச்சி என்பது பலவிதமான இன்னல்களையும், இடர்பாடுகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து காலங்கள் செல்ல செல்ல, பல்வேறு மாற்றங்களோடு இன்று இந்த வளர்ச்சி நிலைக்கு வந்திருக்க வேண்டும். வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் தகர்த்து எறிந்து விட்டு, இந்த முழுமையான வளர்ச்சிக்கு தன்னை துவக்க காலத்திலிருந்தே தயார் படுத்திக் கொண்டே இருந்த காரணத்தால்தான், இன்று இந்த வெற்றியை சந்தித்திருக்க முடியும்.

🔥 *இன்றைய தற்சோதனை*

🔥 ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் இது பொருந்தும். பொருளாதாரத்தில் ஆன்மீகத்தில் எவரொருவர் இருக்கின்ற நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேற்றம் காண வேண்டும் என்றாலும் அவர்களுக்கு நிறைய தடைகளும், இடர்பாடுகளும், இன்னல்களும் சமுதாயத்தில் இருக்கவே செய்யும். இவைகள் அனைத்தையும் தாங்கி அவர் தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற வேண்டும். இந்த தெளிவு ஒருவரிடம் இல்லாதபோது சோதனை வரும் போது சோர்ந்து விட நேரிடும். வெற்றி பாதையிலிருந்து விலகி வேறு திசையில் அவருடைய வாழ்க்கை திசைமாறலாம்.

🔥 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔥 நம்முடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவைகளை எதிர்கொள்வதற்கு நாம் எப்போதும் நம்மை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலை நம்மிடம் நிரந்தரமாக இருக்குமேயானால், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும். "பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" திருக்குறளை மறந்து விட கூடாது. நம்முடைய கருமையத்தில் நமக்கு நடைபெற வேண்டிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படை அமைப்பு இருக்கிறது. இதனை மனதில் கொண்டு ஆன்மீக பயணத்தை நம்பிக்கையோடு இனிதே துவங்குவோம். வாழ்க வளமுடன்...

🔥 *இன்றைய மூலிகை*

🔥 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🔥 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔥 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments