🗻🔰🗻🔰🗻🔰🗻🔰🗻🔰🗻
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 03*
🗻🔰🗻🔰🗻🔰🗻🔰🗻🔰🗻
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 மனமாகப்பட்டது எதனோடு வேண்டுமானாலும் இணைந்து இயங்கும். எதுவாக வேண்டுமானாலும் மாறி நின்று இயங்கும் மனதிற்கென்று தனியாக அறிவியக்க முறையோ அமைப்போ கிடையாது. மனிதனுடைய பொறுப்பும் கடமையும் மனதை அறிவோடு இணைத்து விடுவதாகும். இந்த இணைப்பை ஏற்படுத்துவதற்காக மனிதனுக்கு வழங்கப்பட்ட, மிகச்சிறந்த வாய்ப்பினைத் தான் வாழ்க்கை என்று சொல்கின்றோம்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀இந்த வாழ்க்கை முறையில் குண்டலினி யோகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது மனமும் அறிவும் ஒன்றை ஒன்று சந்திக்கிறது. இவ்விரண்டுக்குமான நட்பும், ஒருங்கிணைப்பும், அரவணைப்பும் "அருள்" என்ற பதமான தன்மையை பெறுகிறது. முரண்பாடான சிந்தனைகளும் செயல்களும் இயற்கைக்கு பொருந்தாத, வாழ்வியல் அமைப்புக்கும், மனதுக்கும், அறிவுக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. உடலில் நோயாகவும், மனதில் குழப்பமாகவும், வாழ்க்கையில் சிக்கலாகவும் இதைத்தான் உணர்கின்றோம்.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 ஏதோ ஒரு பக்கம் தவறு செய்து விட்டாலோ, அல்லது தன்னுடைய கடமையில் இருந்து விலகினாலும், அதனுடைய பாதிப்பு ஏதோ ஒரு பக்கத்தில் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலித்து, நாம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பமாகவும், சூழ்நிலையாகவும், மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். திருத்தங்கள் ஏற்படாத வரை, சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளாத வரை, உடலும் மனமும் மீண்டும் மீண்டும் குழப்பங்களுக்குள் உழன்று கொண்டே தான் இருக்கும். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌀 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment