🎼🕯️🎼🕯️🎼🕯️🎼🕯️🎼🕯️🎼
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 02*
🎼🕯️🎼🕯️🎼🕯️🎼🕯️🎼🕯️🎼
⛳ *இன்றைய நித்தியகடன்*
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⛳ *இன்றைய சாதகம்*
⛳ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
⛳ *இன்றைய நற்சிந்தனை*
⛳ கருவில் உருவாகும் ஒரு குழந்தைக்கு நலந்தரும் விதத்தில் என்னென்னவெல்லாம் தேவையோ, அவை எல்லாவற்றையும் அடிப்படையாக அமைத்துக் கொண்டு வானில் விண்துகள்கள் கூடி இணைந்து இயங்கும், செயலுக்குத் தக்க விளைவு என்ற அடிப்படை நீதியை கொண்டு இந்த கருமைய இயக்கத்திற்கும் வானிலுள்ள அந்த விண்கள இயக்கத்திற்கும், எப்போதும் இணைப்பு இருந்து கொண்டே இருக்கும். உள்ளும் புறமும் உள்ள அமைப்பை இணைப்பதற்கு, இரண்டுக்கும் பொதுவான ஒரு நீதி செயல்அமைப்பு இருந்தே ஆக வேண்டும்.
⛳ *இன்றைய தற்சோதனை*
⛳ இருவேறுபட்ட தன்மைதான் ஒன்றையொன்று எதிர்க்கும் கவரும். இயக்க வேறுபாடுகளை உணரும் குண்டலினி யோகம் ஆரம்ப பயிற்சியில் நமக்கு கிடைத்த அனுபவங்கள், நாளாக நாளாக நமக்கும் அதற்குமான இயக்க அமைப்பு ஒன்றுபடும் போது, ஒரு வெற்றிடம் இருப்பது போல அனுபவம் ஏற்படுவது இயல்பு. இதையும் கடந்து செல்லும்போது அதுவாகி நின்று அனுபவங்களை அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையின் இறைவனின் எல்லாவிதமான நீதியை அமைப்பை உணரமுடியும்.
⛳ *இன்றைய பண்புப்பயிற்சி*
⛳ திட்டமிடல், அயரா விழிப்பு நிலை, தற்சோதனை, சகிப்புத்தன்மை, தியாகம், விட்டுக்கொடுத்தல் இந்த பண்புகள் இல்லாமல் நம்மால் நமக்கு உள்ளும் புறமும் இருந்து இயங்கும், உயிரியக்க அமைப்பை இறைநீதியை உணர்வது என்பது இயலாத காரியம். பொறுமையோடு அமைதியாக அன்றாடம் நம்முடைய செயல்களை எல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டு உடற்பயிற்சி, காயகற்பம், தவமும், இவைகளில் ஒவ்வொரு நாளும் தற்சோதனை செய்து உயிருக்கும், உடலுக்கும், மனதிற்கும், இயற்கைக்கும் இடையே உள்ள இனிமையை காத்துக்கொள்ளும் முயற்சிதான் இறைநிலையை உணர்தாகும் வாழ்க வளமுடன்...
⛳ *இன்றைய மூலிகை*
⛳ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
⛳ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
⛳ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⛳ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment