நித்தியகடன் டிசம்பர் 01 2020

🍭💠🍭💠🍭💠🍭💠🍭💠🍭

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 01*

🍭💠🍭💠🍭💠🍭💠🍭💠🍭

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 அணுக்களின் வலச்சூழல், இடச்சுழல், சுழல் வேகவிரைவுக்கு ஏற்பவும், உண்ணும் உணவு, பருவகால ஏற்றத்தாழ்வு, இவை அனைத்திற்கும் ஏற்ற அந்த உடலில் ரசாயனம் மாறும், குணம் மாறும். ஆகவே உடலிலுள்ள ஓட்டங்கள் அனைத்தையும் எப்போதும் நாம் சீராக பராமரிப்பதற்காகவே, நமக்கு உடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 நாள் தவறாமல் எளியமுறை உடற் பயிற்சியை செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் யாவும் சீராக அமைந்து இயங்குகிறது. உடல் அடையும் ரசாயன மாற்றத்திற்கு ஏற்ப நம் எண்ணங்களும் பலவிதமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. ஆகவே நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வோம், தற்சோதனை செய்து உண்மையை உணர்வோம்.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 நமக்குள் இருக்கும் மனிதப் பண்பு மேலோங்க வேண்டுமானால், அதற்குரிய செயல் நம்மிடையே எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதப் பண்பு நமக்குள் மேலோங்கும். இந்த சரீரம் விலங்கின பண்பால் உருவானது. மனித பண்புக்கு நாம்தான் முயற்சி செய்து மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்பும் கருணையும் இயல்பாகக் கொண்டு உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, காயகல்பம் இவைகளை செய்யும்போது மனிதப் பண்பு நம்முள் உயர்வதை உணரலாம். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🍁 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments