☄️🌸☄️🌸☄️🌸☄️🌸☄️🌸☄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 31*
☄️🌸☄️🌸☄️🌸☄️🌸☄️🌸☄️
🌕 *இன்றைய நித்தியகடன்*
🌕 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌕 *இன்றைய சாதகம்*
🌕 சனிக்கிழமை இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌕 *இன்றைய நற்சிந்தனை*
🌕 மனதிற்கும் மனமுண்டு, உயிருக்கும் உயிர் உண்டு. இதனை எப்படி உணர்ந்து கொள்வது என்பதில் இருக்கக்கூடிய, வேறுபாடும் முயற்சியும் உங்களை உங்களுக்குள் ஆழமாக அழைத்து செல்லும். நம்முடைய பழக்கவழக்கங்களை எல்லாம் சீர்திருத்தம் செய்து மாற்றி அமைத்துக் கொள்ளாமல், மனதின் மனதை உயிரின் உயிரை உணர்வது என்பது இயலாத காரியம். உயிருக்கும் மனதிற்கும் உகந்த முறையில் நம்முடைய எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
🌕 *இன்றைய தற்சோதனை*
🌕 எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார்? என்ற இந்த தற்சோதனை பயிற்சிகள் அனைத்தும் நம்மை பதப்படுத்தும் பக்குவப்படுத்தும். மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம். இவை அனைத்தும் அதற்கு தகுந்த முறையில் உடலாலும் உடல் இயக்கத்தாலும், நம்மை ஒவ்வொரு நொடிப்பொழுதும் தயார்படுத்தும் தயாரிப்பு வேலைகள் நடக்காமல், எந்த ஒரு நிகழ்ச்சியையும் நமக்குள் அரங்கேற்றம் செய்ய இயலாது.
🌕 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌕 மன்னிப்பு, இரக்கம், உதவி, நேர்மை, உண்மை, வாய்மை போன்ற பண்புகளில் நம்மை உயர்த்திக் கொள்ளும் போது நமக்குள் இருக்கக்கூடிய விலங்குகளின் தன்மை மாற்றம் பெறுகிறது. இயல்பாக உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் இணக்கமான தன்மை உருவாகிறது. இதன் விளைவாக அணு அடுக்குகள் சீராகவும் சீவ காந்தம் அடர்த்தியாகவும் அமைந்து இயங்குகிறது. மனதின் மனதையும் உயிரின் உயிரையும் உணர்வதற்கான தயாரிப்பு வேலைகள் வாய்ப்புகள் உருவாகிறது. இதை அனுபவமாக நாம் கொண்டு நம்முடைய சந்ததிகளை வளமான வாழ்க்கை முறைக்கு உயர்த்துவோமாக. வாழ்க வளமுடன்...
🌕 *இன்றைய மூலிகை*
🌕 *கரும்பு சாறு* கரும்பு சாறு இஞ்சி, எலுமிச்சை,( ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
🌕 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌕 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌕 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌕 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment