🌅🌿🌅🌿🌅🌿🌅🌿🌅🌿🌅
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 30*
🌅🌿🌅🌿🌅🌿🌅🌿🌅🌿🌅
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 ஒரு மணியினுடைய ஓசையானது, அந்த மணி எந்த உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொருத்தும், அந்த மணியை சரியான முறையில் உபயோகப்படுத்தப்பட்ட முறையைப் பொருத்தும், அதிலிருந்து ஓசை எழும். அந்த மணியை முறைதவறி உபயோகப்படுத்தினாலோ, ரம் அல்லது உலோகக்கலவை களங்கப்பட்டிருந்தாலோ சிறப்பான ஓசை எழாது. நம் மனதில் இருந்து நல்ல எண்ணம் எழுவது இல்லை, மனதிற்கு நல்லதொரு வைராக்கியமும் இல்லை இது ஏன்? என்று சிந்திப்போம்
🍁 *இன்றைய தற்சோதனன*
🍁 இந்த பூமிக்கு வரும்போது நாம் களங்கங்களோடு தான் வந்திருக்கிறோம். இந்த களங்கங்களை போக்கிக் கொள்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான முயற்சிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையட்டும் என்றே நமக்கு யோகப் பயிற்சியை அன்போடு அருளியிருக்கிறார், வேதாத்ரி மகரிஷி அவர்கள். இவைகளை முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி காண்போம்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 "முன்னை வினையின் முடிச்சை அவில்ப்பர் பின்னை வினையை பிடித்து பிசைவர் சென்னியில் வைத்த சிவனருளாலே" இவ்வாறு நாம் கொண்டுவந்த வினையையும், இனி நம் கருமையத்துக்குள் சேரப்போகும் வினையையும், திட்டமிட்டு செயலாற்றி சீர்திருத்தம் செய்துகொள்ள முடியும், என்று நமக்கு முன்னதாக வாழ்ந்து வெற்றி கண்ட ஞானிகளும், மகான்களும், மகரிஷிகளும் நமக்கு பாதுகாப்பாக உறுதுணையாக வழிநடத்திய வழி நடத்துபவராக இருக்கிறார்கள், என்பதை நினைவில் கொண்டு வைராக்கிய மனதோடும் விடாமுயற்சியோடும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம். முயற்சிக்கே நம்மை அர்ப்பணிப்போம் வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🍁 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🍁 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment