நித்தியகடன் அக்டோபர் 27 2020

🎭🏮🎭🏮🎭🏮🎭🏮🎭🏮🎭

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 27*

🎭🏮🎭🏮🎭🏮🎭🏮🎭🏮🎭

🌸 *இன்றைய நித்தியகடன்*

🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌸 *இன்றைய சாதகம்*

🌸 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🌸 *இன்றைய நற்சிந்தனை*

🌸 எந்த நிலையிலிருந்து ஒரு செயல் செய்யப்படுகிறதோ அந்த நிலையினுடைய தன்மையாவும்
அந்த செயலில் நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு பொதுவாக இருந்து ஒரு நிகழ்ச்சியை ஆய்வு செய்வதற்கும், அதுவாகவே இருந்து அந்த நிகழ்ச்சியை ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. மனம் நின்று மனதை உணர்வதற்கும், உயிராக நின்று மனதை உணர்வதற்கும் வேறுபாடு உண்டு. இறைவனாய் நின்று இறைவனை உணரும் ஞான நெறி வாழ்க்கைக்கு நம்மை உயர்த்திக் கொள்வோம்.

🌸 *இன்றைய தற்சோதனை*

🌸 சிறுதுளியே பெருவெள்ளம். அன்றாட கடமைகளில் நம்முடைய உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இக்கடமையை நிறைவாக செய்து கொண்டே அதற்கான அனுபவப் பதிவுகளை கருமையத்தில் உயிரில் பதிவுசெய்து, சிறுக சிறுக நிதானமாக முன்னேற்றம் காண்போம். ஆன்மீகத்தில் பொறுமை என்பது மிகவும் அவசியமாகும். கடமை செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு செய்த செயலினுடைய விளைவை எதிர்பார்ப்பதும், இப்படி நடைபெறவேண்டும் என்று நினைப்பதற்கும், நமக்கு உரிமை கிடையாது.

🌸 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌸 உடலிலும், மனதிலும், உயிரிலும், பிரபஞ்சத்திலும், சமுதாய நிலைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் அத்தனையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ள பழகுவோம். இந்த பண்பு ஒன்று, நமக்குள் இருக்கும் ஞானத்தை மலர வைக்கக் கூடியதாகும். புதிய புதிய ஆய்வுகள் நமக்குள் உருவாகும். நம்முடைய வாழ்க்கையினுடைய இன்னொரு பகுதியும் நமக்கு அனுபவமாகும். செயல் விளைவு நீதியின் அடிப்படையில் அனைத்து இயக்க அருட்பேராற்றல், இச்செயல்களை நிதானமாக நடத்திக் கொண்டு வருகிறது. வாழ்க வளமுடன்...

🌸 *இன்றைய மூலிகை*

🌸 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🌸 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🌸 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌸 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌸 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌸 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments