நித்தியகடன் அக்டோபர் 26 2020

🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 26*

🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀

🚦 *இன்றைய நித்தியகடன்*

🚦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🚦 *இன்றைய சாதகம்*

🚦 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🚦 *இன்றைய நற்சிந்தனை*

🚦 மனதில் இருந்து மனதிற்கு பயணம் செய்ய முடியும். உயிரிலிருந்து உயிருக்கு பயணம் செய்ய முடியும். அதற்கான தகுதி நமக்குள் உருவாகிவிட்டால் இது நிச்சயமாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு கருமையமும் அனுபவமாக பெறுவதற்காக உருவாக்கப்பட்டதே வேதாத்திரியம். தகுதியை வளர்த்துக் கொண்டு அதற்குரிய தன்மையோடு ஆன்ம பயணத்தை சீராக தொடருங்கள். எங்கேயும் எப்போதும் தொய்வு இல்லாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

🚦 *இன்றைய தற்சோதனை*

🚦 நம்மை நாம் கவனிக்கும்போது தகுதி உயரும். விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம், சீர்திருத்த வாழ்க்கைமுறை இம்முறையில் வாழும் போதும் தகுதி உயரும். தானும் தன் குடும்பமும் சேர்ந்து தன்னிறைவு காணும் முறையிலும் வகையிலும் வாழுதல், இவையாவும் தகுதி உயர்வுக்கான தீர்க்கமான செயல்களாகும். இச்செயல்கள் உடல் வலிமையையும், மன வலிமையையும், அறிவு உயர்வையும் கொடுக்கவல்லது. மனதால் உணரமுடியாத நிகழ்ச்சி என்பது இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை.

🚦 *இன்றைய பண்புப்பயிற்சி*

🚦 தன்னை தானே ஒழுங்கு அமைத்து கொள்ளுதல் என்ற பண்பு, ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும். தன்னுடைய சிறப்பு என்ன என்பதை இதனால் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பும் வசதியும் பெருகும். உயிரை உணரும் மனமும், உயிரை அறியும் அறிவும் நமக்குள் நிதானமாக உயர்ந்து கொண்டே வரும். தன்னைத்தானே கவனித்து பன்முகத் தன்மையோடு உங்களை நீங்களே ஆய்வுக்கு உட்படுத்தி, உங்களுடைய வாழ்க்கையின் பார்வையாளராக நீங்களே இருந்து பாருங்கள். இதன் விளைவுகள் யாவும் உண்மையாய் மலர்ந்து ஞானமாய் ஒளிரும். வாழ்க வளமுடன்...

🚦 *இன்றைய மூலிகை*

🚦 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🚦 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🚦 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🚦 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🚦 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🚦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🚦 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments