⬜⚫⬜⚫⬜⚫⬜⚫⬜⚫⬜
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 25*
⬜⚫⬜⚫⬜⚫⬜⚫⬜⚫⬜
🌿 *இன்றைய நித்தியகடன்*
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌿 *இன்றைய சாதகம்*
🌿 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌿 *இன்றைய நற்சிந்தனை*
🌿 பரு உடலுக்கு உள்ளாக அமைந்திருக்கும் பஞ்சபூத அணுக்களும் அவை சார்ந்த இயக்கங்களும், ஒன்றை ஒன்று அரவணைத்து நட்பு நிலையில் உயர்ந்து இயங்க வேண்டும். அது மட்டுமின்றி பிரபஞ்சவெளியில் இருக்கக்கூடிய, பஞ்சபூதங்களோடும் இணக்க தன்மையோடு இணைந்து இயங்க வேண்டும். எதிர்மறை தன்மைகள் இல்லாமல் இவைகள் இணைந்து இயங்கும் போது தான் நம்முடைய உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், அறிவு உயர்வும் அமையும்.
🌿 *இன்றைய தற்சோதனை*
🌿 இந்த Milky way galaxy முழுமையும் நிறைந்திருப்பது பஞ்சபூத காந்த இயக்கங்கள். இந்த பஞ்சபூத காந்த இயக்கத்தில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவங்கள் புதைந்து இருக்கிறது. இந்த அனுபவங்களிலும் பிரிவுகளிலும் நாம் இணைந்து அதனோடு ஒன்றி கலந்து, அதனுள் இருக்கும் ரகசியங்களை உணர்ந்து கொள்வதே பிரம்ம ஞான அனுபவமாகும். இதற்கு உடலையும் மனதையும் தயார்படுத்த முறையான பயிற்சி வேண்டும்.
🌿 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌿 நம் உடலுக்குள்ளும் பிரபஞ்ச வெளியிலும், இந்த பஞ்சபூத காந்த அமைப்புகள் படலம் படலமாக இருந்து இயங்குகிறது. ஒரு படலத்தில் இருந்து தான் மற்றொரு படலத்திற்கு தவத்தின் மூலமாகவும் உடற்பயிற்சி மூலமாகவும் பயணம் செய்கின்றோம். இந்த பயணம் நமக்கு பல அனுபவங்களை உள்ளுணர்வாக ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக நம்முடைய மனம் தெளிந்த நிலையில், உயிரைப் பற்றிய ரகசியங்களை, இறைவனைப் பற்றிய ரகசியங்களை உணர்ந்துகொள்ள பூரணமாக முயற்சி செய்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகளும் அவரவர் கருமைய தன்மைக்கு ஏற்ப அமைகிறது, இயங்கி மலர்கிறது. வாழ்க வளமுடன்...
🌿 *இன்றைய மூலிகை*
🌿 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌿 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌿 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment