⬛⭕⬛⭕⬛⭕⬛⭕⬛⭕⬛
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 17*
⬛⭕⬛⭕⬛⭕⬛⭕⬛⭕⬛
🍥 *இன்றைய நித்தியகடன்*
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍥 *இன்றைய சாதகம்*
🍥 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍥 *இன்றைய நற்சிந்தனை*
🍥 மனதை எதன்மீது செலுத்துகிறோமோ மனம் அதுவாக மாறிவிடும். மனம் எங்கு செலுத்தப்படுகிறதோ அங்கு காந்தசக்தி குவியும். இந்த விஞ்ஞான அடிப்படையில் நாம் சில பல உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனதை எதன்மீது செலுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். மனம் எங்கு செலுத்தப்பட்டாலும் அங்கு காந்தசக்தி குவிகிறது, அது பொருளாக இருக்கலாம், அல்லது நபராக இருக்கலாம், அது எப்படி இருந்தாலும் அதற்கும் நமக்குமான தொடர்பு அதிகரிக்கும்.
🍥 *இன்றைய தற்சோதனை*
🍥 இந்த பிரபஞ்சத்திற்கு உள்ளேயும் வெளியேயும், நம்முடைய உடலுக்கு உள்ளேயும் வெளியேயும், ஏராளமான ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. நம்முடைய மனதிற்கு பொறுப்பு என்பது கிடையாது. அதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆராய்ச்சி இல்லாமல் ஓடி திரியும். மனதை முறைப்படுத்தி உணர்ந்து, தெளிந்து வாழ்வதற்கு அகத்தவமும், அகத்தாய்வும் அவசியம். மன இயக்கத்தின் விளைவாக தான் நாம் நம் வாழ்வை வாழ்கின்றோம்.
🍥 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍥 அது நல்ல விளைவை தருமேயானால் அது வரவேற்கத்தக்கதே. அதே சமயம் தீய விளைவை தருமேயானால் அது தவிர்க்க வேண்டிய ஒன்று. நல்லது, தீயது என்பதை நாம் நடுநிலையோடு இருந்து தற்சோதனை செய்து முடிவெடுத்தால் மட்டும்தான் அது நமக்கும், இயற்கைக்கும் ஒத்ததாக இருக்க முடியும். சார்பு தன்மையோடு எப்போதும், நாம் எங்கேயும் எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது. நடுநிலையோடு வாழும் பண்பில் உயர்வோம், பிரபஞ்ச பேருண்மைகளை உள்ளுணர்வால் உணர்வோம். வாழ்க வளமுடன்...
🍥 *இன்றைய மூலிகை*
🍥 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍥 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🍥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍥 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment