🌾🌍🌾🌍🌾🌍🌾🌍🌾🌍🌾
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 15*
🌾🌍🌾🌍🌾🌍🌾🌍🌾🌍🌾
👣 *இன்றைய நித்தியகடன்*
👣 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
👣 *இன்றைய சாதகம்*
👣 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
👣 *இன்றைய நற்சிந்தனை*
👣 வீண் பேச்சு, கவலை, மனக்குழப்பம், ஒழுங்கற்ற எண்ண ஓட்டம், உணர்ச்சி வயப்படுதல் போன்ற செயல்பாடுகளால் சீவகாந்தம் விரயமாகிறது. மேலும் எதிரிகளை, வாழ்க்கை சிக்கல்களை உருவாக்குகிறது. இதற்கு பல்வேறு முறைகளில் சிந்தித்து தெளிவு பெற வேண்டியிருக்கிறது. தற்சோதனை மூலமாகத்தான் அமைதியையும், ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே விரயங்களை தவிர்க்கலாம், சீவகாந்தமும் போதிய அளவு நிரம்பி நிற்கும்.
👣 *இன்றைய தற்சோதனை*
👣 விளையாட்டாக நம்முடைய எண்ணம், சொல், செயல்களை பயன்படுத்துபோது விபரீதமாக முடிகிறது. நல்லதைச் செய்வதற்கு நமக்குள் ஒரு சாதனை இலக்கை வைத்துக் கொள்வோம். அதனை அடைய முயற்சி செய்வோம், முடியும் வரை முயற்சி செய்வோம், அதற்கு பொறுமை வேண்டும். ஒவ்வொரு சின்னச் சின்ன சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்து கவனத்தோடு கையாள வேண்டும். நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அனைத்துமே நம் உடலில், மனதில், உயிரில் இருந்தே துவங்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
👣 *இன்றைய பண்புப்பயிற்சி*
👣 போட்டி, பொறாமை, வஞ்சம், பகை, பிணக்கு இவைகளுக்கு நமக்குள் இடம் கொடுக்காமல் வாழ முயற்சி செய்யும்போது மட்டுமே, நம்மால் ஆன்மீக அனுபவத்திலும் உயர்வு பெறுமுடியும். உடல், மனம், அறிவு இவைகளை உயரிய இடத்தில் நிலை நிறுத்தவும் முடியும். மேலும் ஆரோக்கியமான உடலமைப்பும், உடல்களின் உள்ளுறுப்புகளும், அவைகளோடு இணைந்து இயங்கும் உயிர் உடலும், காந்த உடலும் என இவை அனைத்தும் நிறைவான இயக்கமாய் அமையும். வாழ்க வளமுடன்...
👣 *இன்றைய மூலிகை*
👣 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
👣 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
👣 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
👣 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
👣 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
👣 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment