❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 14*
❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️
⛳ *இன்றைய நித்தியகடன்*
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⛳ *இன்றைய சாதகம்*
⛳ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
⛳ *இன்றைய நற்சிந்தனை*
⛳ அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கும் அனைத்து வகையான உண்மைகளையும் உணர்ந்து கொள்வதற்கு, அவர் அவர்களுக்குள் முறையான அமைப்பு இருப்பாக வைக்கப்பட்டுள்ளது. தன்னார்வத்தோடு எவரொருவர் முயற்சித்தாலும் இந்த உண்மைகள் அனைத்தையும், அவர்களுக்குள் அனுபவமாக உயிரிலும் மனதிலும் அனுபவமாக உணரமுடியும். மனம் ஒன்றுபட வேண்டும் எந்த ஒரு உண்மையை உணர்வதாக இருந்தாலும் மனப்பக்குவம் என்பது மிகமிக அவசியம்.
⛳ *இன்றைய தற்சோதனை*
⛳ இந்த பிரபஞ்சத்தில் எல்லா விதமான செயல்களுக்கும் ஒரு விளைவு கட்டாயம் உண்டு. எந்த செயலும் செயலோடு முடிந்துவிடுவது இல்லை. எந்த ஒரு செயலானாலும் விளைவில்தான் முடிவடைகிறது. குண்டலினி யோகப் பயிற்சியில் நம்மை ஆழமாக புரிதலோடு இணைத்துக் கொள்ளும்போது, இந்த உண்மைகள் தெள்ளத் தெளிவாக விளங்கும். அதுமட்டுமின்றி நம்மை சிக்கல்களிலிருந்தும், இடற்பாடுகளிலிருந்தும், மன, உடல் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றக்கூடிய பாதுகாப்பு அரணாகும் நமது குண்டலினி யோகம்.
⛳ *இன்றைய பண்புப்பயிற்சி*
⛳ புற மனதில், புலன் இன்பங்களில், இறைநிலையை உயிரை, மனதை, உடலை பற்றிய ஆராய்ச்சியும் இல்லாத காரணத்தால், மனிதன் மனிதனாக வாழமுடியவில்லை. போட்டி, பொறாமை, பொய், சூது, களவு, கற்பழிப்பு போன்ற பஞ்சமகாபாதகங்களில் மனிதன் தன்னுடைய தரத்தையும் தன்மையையும் இழந்து விடுகின்றான். இந்த பாதக செயல்களை எல்லாம் விட்டு விலகி, விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்வதற்கு இந்த மனவளக்கலை பயிற்சி உள்ளும் புறமும் இருந்து வழிநடத்தும், பாதுகாப்பாய் அமையும். வாழ்க வளமுடன்...
⛳ *இன்றைய மூலிகை*
⛳ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
⛳ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⛳ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment