♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 13*
♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️
🌐 *இன்றைய நித்தியகடன்*
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌐 *இன்றைய சாதகம்*
🌐 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌐 *இன்றைய நற்சிந்தனை*
🌐 மனிதனுக்குள் பலவிதமான திறமைகள் புதைந்து இருக்கிறது. அவைகளை எல்லாம் முறையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், அதற்கான பயிற்சி முறை நிச்சயமாக தேவை. ஒரு வாகனத்தை நல்ல முறையில் இயக்க வேண்டுமானாலும், ஒரு கணினியை நல்ல முறையில் பயன்படுத்தி வேண்டுமானாலும் பயிற்சி தேவை. இந்த திறமைகள் அனைத்தும் எங்கே புதைந்திருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு சிந்தித்தால் அவை அனைத்தும் கருமையத்தில் இருக்கின்றன.
🌐 *இன்றைய தற்சோதனை*
🌐 நம்முடைய மனதை கருமையத்துக்குள் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய, காந்த படிமங்களுக்குள் மனதை நுணுகி வைத்து தவம் செய்யும் போது, அவைகள் மூளை சிற்றறைகள் வழியாக அனைத்து திறமைகளும் மலர்ந்து வெளிப்படும். உயிருக்கும், மனதிற்கும், நல்ல நட்பு, இணக்கத் தன்மை நல்ல முறையில் அமைய வேண்டுமானால் பயிற்சி தேவை.
இதற்கான சிறப்பான பயிற்சி முறைதான் மனவளக்கலை தியானப் பயிற்சிகள்.
🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌐 இந்த பயிற்சி முறையை நாள் தவறாமல் செய்து, வாழ்வில் நம் கருமையத்தில் இருக்கும் நல்ல பல திறமைகளை வெளிப்படுத்த போதிய வாய்ப்புகள் உருவாகும். அதை நாமும் பயன்படுத்தி சமுதாயத்திற்கும் நாம் நல்ல வழிகாட்டியாகவும் வாழலாம். இனிய துவக்கங்களை நோக்கி முன்னேறுவோம், முழுமையான வாழ்க்கையை நாமும் நம் குடும்பமும் வாழ்வோம்... வாழ்க வளமுடன்...
🌐 *இன்றைய மூலிகை*
🌐 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌐 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment