💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 12*
💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢
🔘 *இன்றைய நித்தியகடன்*
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🔘 *இன்றைய சாதகம்*
🔘 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🔘 *இன்றைய நற்சிந்தனை*
🔘 "உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும் செய்வதும் நித்தியகடன்" மனிதனுடைய வாழ்க்கை இணைதலும் பிரிதலுமாகும். இணைய வேண்டிய பொருளோடு இணைந்து, அதற்கும் நமக்குமான நிலைபாடுகளை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும். பிரிய வேண்டிய பொருள்களை பிரிந்து, அதற்கும் நமக்குமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டு, பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நமக்கும் நல்லது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
🔘 *இன்றைய தற்சோதனை*
🔘 உயிரோடும், காந்தத்தோடும், பிரபஞ்ச வெளியில் வானுலாவும் கோள்களோடும் நாம் இணைந்து வாழவேண்டும். அதற்கும் நமக்குமான அறிவாட்சித்தரம், ஆளுமைத்திறன், இவைகள் அனைத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். விலங்கின பதிவுகள் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் பஞ்சமகாபாதகங்களாகிய பொய், சூது, களவு, கொலை, கற்பழிவு இவற்றிலிருந்து நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும்.
🔘 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔘 படிப்படியாகத்தான் இந்த செயல்களில் நாம் முழு வெற்றியை காண முடியும். அதுவரையில் நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சியை ஒருபோதும் ஒருநாளும் கை விட்டு விடக்கூடாது. மனவளக்கலை பயிற்சியின் துணைகொண்டு நமக்குள் நாம் பயணித்து, இறுதியாக இறைநிலையோடு ஒன்றிக் கலந்து, அதுவாக வாழும் ஞானமான வாழ்க்கைக்கு உயர்வோம். வாழ்க வளமுடன்...
🔘 *இன்றைய மூலிகை*
🔘 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🔘 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🔘 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🔘 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔘 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔘 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment