🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 11*
🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮
🗿 *இன்றைய நித்தியகடன்*
🗿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🗿 *இன்றைய சாதகம்*
🗿 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🗿 *இன்றைய நற்சிந்தனை*
🗿 மனிதனுடைய வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. நன்மைகளை செய்ய முயற்சிக்கும் போது அதற்கு, நிறைய இடற்பாடுகள் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் தேவையில்லாத பழிச்செயல் பதிவுகளை (பொய், சூது, களவு, கற்பழிவு, கொலை) பஞ்சமாகாபாதகங்களை செய்வதற்கு விரைவாகவும், எந்தவிதத் தடையும் இல்லாமலும் அவைகளை சுலபமாக செய்து முடிக்கப் படுகிறது.
🗿 *இன்றைய தற்சோதனை*
🗿 தியானம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இல்லாமல் இதனை புரிந்து கொள்வதும், இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும், விடுவித்துக் கொள்வதும் இயலாத காரியம். நாம் மொத்த விலங்கினத்தினுடைய தொகுப்பு, விலங்கினத்தின் ஒட்டுமொத்த அடையாளம். இக்காரணத்தினாலேயே சுலபமாக நம் தீமைகளை செய்வதற்க்கு, உண்டான வழிவகை வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன.
🗿 *இன்றைய பண்புப்பயிற்சி*
🗿 விளங்கினர் பண்பான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளுக்கு நேர் எதிரான மனித பண்பான நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர்நிறை சம உணர்வு, மன்னிப்பு இவைகளில் ஆழ்ந்து ஓங்கி வளர்ந்தால் , தீமைகளை செய்வதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இது போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான். தற்காலச் சூழலலில் நாம் இந்த போராட்டத்தை நமக்குள்ளாகவே நடத்திக் கொண்டிருக்கிறோம். வேதாத்திரியத்தின் துணைகொண்டு வென்றே தீருவோம். வளர்க வேதாத்திரியம்.
வாழ்க வளமுடன்...
🗿 *இன்றைய மூலிகை*
🗿 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🗿 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🗿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🗿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🗿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🗿 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment