🔘🎌🔘🎌🔘🎌🔘🎌🔘🎌🔘
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 08*
🔘🎌🔘🎌🔘🎌🔘🎌🔘🎌🔘
🕳️ *இன்றைய நித்தியகடன்*
🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🕳️ *இன்றைய சாதகம்*
🕳️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🕳️ *இன்றைய நற்சிந்தனை*
🕳️ "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" இயற்கைக்கு ஒத்த முறையில் இசைவாக நாம் நம்முடைய எண்ணம், சொல், செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைத்துக்கொண்டு நம் உடல் செல்களில், உயிர் துகள்களில், கருமையத்தில் பதிவாகும் பதிவுகள், நல்வினை பதிவாக அமைந்தால் அதுதான் உயிருக்கு நாம் சேர்த்து வைக்கும் ஊதியம், உயிருக்கு என்று சில பொருள்களை நாம் சேர்க்க வேண்டி உள்ளது. அதைத்தான் வள்ளுவர் இக்குறளில் தெளிவாக விளக்கியுள்ளார்.
🕳️ *இன்றைய தற்சோதனை*
🕳️ நாம் என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும், என்ன பேசினாலும், அது உடல் செல்களில், கருமையத்தில் உயிர்துகள்களில் பதிவாகி விடுகிறது. இது இயற்கையின் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, இறைவன் நம்முடைய கணக்கு புத்தகமாக கருமையத்தை பயன்படுத்தி வருகின்றான். அவனே அதற்கு சாட்சியாகவும் இருக்கிறான். செயலுக்குத் தக்க விளைவு என்பது ஒரு நாளும் ஒரு பொழுதும் மாறவே மாறாது. இதை மறுப்பதற்கும் யாரும் கிடையாது. இதனை தற்சோதனைக்கு எடுத்துக் கொண்டு, இதன் உட்பொருள் உண்மைகளை உணர்ந்து கொள்வோமாக.
🕳️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕳️ நமக்குள் எல்லா வகையான பாவ பதிவுகளும், எல்லா வகையான புண்ணிய பதிவுகளும் இருக்கின்றன. இவைகள் முறையாக தொகுக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு நிகழ்கால நம் செயலுக்கு ஏற்ப விளைவு, கணக்கோடு இணைக்கப்பட்டு எதிர்கால சூழ்நிலையை உருவாக்குகிறது. உயிரின் மையத்தில் இதற்கான உண்மைகளும், சான்றுகளும் ஏராளமாக இருக்கிறது. தெளிவும், ஞானமும் இங்கேதான் முளைக்கும். அதனை முளைக்கச் செய்து கொள்ளவேண்டியது அவரவருடைய பொறுப்பும் கடமையுமாகும். வாழ்க வளமுடன்...
🕳️ *இன்றைய மூலிகை*
🕳️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🕳️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🕳️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕳️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕳️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment