🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 01*
🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 அவரவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ என்ன இருப்பு அவரவர் கருமையத்தில் இருக்கிறதோ அது காலத்தால் செயலுக்கு வந்தே தீரும். இது அவரவர்களுடைய பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து தன்னுடைய எண்ணம், சொல், செயல்களை வெளிப்படுத்தும் விதத்திற்கும் நன்னடத்தைக்கும் ஏற்ப அமைகிறது. ஆக நமக்குள் என்ன இருக்கிறது, அதில் எவ்வளவு நன்மை தீமை இருக்கிறது, இதில் நன்மையை மேலோங்க செய்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் என்னென்ன, என்று தெரிந்து அதன் வழி செயலாற்ற வேண்டும்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 ஒட்டு மொத்த விலங்கினுடைய தொகுப்பாக நாம் இந்த மனித உருவத்தை பெற்றிருக்கிறோம். ஆனால் இந்த மனித உருவமும் மனிதனுடைய கருமையமும் விலங்குகளினுடைய பண்பில் வாழ்வதற்கு உகந்தது அல்ல. மாறாக அவைகளை முறையான பயிற்சி மூலம் மாற்றி அமைத்துக் கொண்டு, மேலான ஞானப் பண்போடும், மனிதப் பண்போடும், இறைப் பண்போடும் வாழ்வதற்கே இம்மனித உருவமும், கருமையமும் அமைந்தது. இதனை நன்றாக தற்சோதனை செய்து ஆய்வு செய்வோமாக.
🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎱 இப்பிறவியினுடைய நோக்கமாகிய விலங்கின பதிவுகளை போக்கிக் கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்காகவே இம்மனிதப் பிறவியானது நமக்கு அமைந்தது. இப்பிறவிக்கு ஒத்த செயல் பண்புகளை ஏற்று அதன் வழியாகத்தான் நாம் நம் வாழ்க்கையை வாழவேண்டும். அதுவே வாழ்வினுடைய நோக்கமுமாகும். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து இவ்வுடலுக்கும், உயிருக்கும் தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🎱 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment