நித்தியகடன் செப்டம்பர் 30 2020

🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 30*

🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮

🕯️ *இன்றைய நித்தியகடன்*

🕯️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🕯️ *இன்றைய சாதகம்*

🕯️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🕯️ *இன்றைய நற்சிந்தனை*

🕯️ தினந்தோறும் உறங்குவதற்கு முன்பாக கட்டாயம் சாந்தி தவம் செய்ய வேண்டும். இந்த மண்ணுக்குரிய மையத்தில் தவம் செய்வதால் இந்த பூமிக்கும் நமக்குமான எதிர்மறையான தன்மைகள் சமப்படுத்தப் படுகின்றன, இணக்கத்தன்மை உருவாகிறது. மேலும் இந்த மண்ணில் இருந்துதான் இந்த உடலும் வளர்ந்திருக்கிறது. மண்ணில் உள்ள உலோகங்கள் ரசாயனங்கள், நம் உடலுக்குள்ளும் சத்துப்பொருட்களாக இருந்து இயங்கி வருகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், பக்க பரிவு நரம்பு மண்டலத்தை சாந்தி தவம் ஊக்கப்படுத்துகிறது.

🕯️ *இன்றைய தற்சோதனை*

🕯️ அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து, நாம் மீண்டும் மீண்டும் சம நிலைக்கு வருவதற்கு இந்த பக்க பரிவு நரம்பு மண்டலம், துரிதம் அடைந்தால் மட்டும் தான் முடியும். இந்த உணர்வுகளை கட்டுப்பாட்டு மையமாக பக்க பரிவு நரம்பு மண்டலம் இருக்கிறது. இந்த நரம்பு மண்டலம் சாந்தி தவம் செய்யும் போது ஊக்கம் அடைகின்றது. நிலையற்ற நம்முடைய மனத்தன்மையையும் உடல் தன்மையையும், நிலையான இயக்கத்ததிற்கு கொண்டு வருவதற்கு சாந்தி தவமே பேருதவியாக அமைகிறது.

🕯️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕯️ உடல் சோர்வு மனச்சோர்வு இந்த இரண்டுக்குமான தீர்வு சாந்தி தவமே ஆகும். தயவுகூர்ந்து தினம்தோறும் உறங்குவதற்கு முன்பாக சாந்தி தவம் செய்து விடுங்கள். பகலில் நாம் நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் அணு அடுக்கு சீர் குழைவுகளை, சாந்தி தவத்தால் சமன் செய்து கொள்ளலாம். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் அளவு முறையை கடைபிடித்து, நாம் அருள் பேராற்றலோடு இணைவதற்கு முயல்வோமாக. வாழ்க வளமுடன்...

🕯️ *இன்றைய மூலிகை*

🕯️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🕯️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🕯️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕯️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕯️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕯️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments