🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 29*
🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌
🍂 *இன்றைய நித்தியகடன்*
🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍂 *இன்றைய சாதகம்*
🍂 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🍂 *இன்றைய நற்சிந்தனை*
🍂 இறை இயக்கம், உயிர் இயக்கம், அலை இயக்கம் இவை அனைத்திலும் ஒவ்வொரு மனிதருக்கும் புரிதல் தேவை. சிக்கல்கள் உருவாவதும் இங்கேதான், சிக்கல்களுக்கான தீர்வுகள் பிறப்பதும் இங்கேதான். ஆக இவைகளை எல்லாம் தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அறிவில் வெளிப்படுகிறது. உலக சிக்கல்களுக்கும் தனிமனித சிக்கல்களுக்குமான தீர்வுகள், எந்த ஒன்றும் இப்பிரபஞ்சத்தில் இயல்பாக தோன்றி காலத்தால் இயல்பாக மறைந்துவிடும்,
🍂 *இன்றைய தற்சோதனை*
🍂 அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், ஓங்கி வாழ்வேன்... இந்த தன் வாழ்த்தினுடைய உள்ளர்த்தம் உணர்ந்துகொண்டு உயிர்களப்போடும் சீவகாந்தத்திணிவோடும், உபயோகப்படுத்தும் போது இதில் சொல்லப்பட்ட அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு அனுபவமாக கிட்டும். உயிர்களப்போடு உபயோகப்படுத்தும் வாழ்த்து அலையானது, அனைத்தும் தற்காலத்திலோ பிற்காலத்திலோ நிச்சயமாக நடந்தே தீரும். வாழ்த்து அலையானது முதலில் நம் உடலை தூய்மை செய்யும், மனதை தூய்மை செய்யும், உயிரை தூய்மை செய்யும் இந்த மூன்றும் தூய்மை பெற்ற நிலையில் மற்றவர்களிடம் இது செயல் புரியத் துவங்கும்.
🍂 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍂 நாம் எந்த அளவு நம்பிக்கையோடும், ஜீவகாந்த திணிவோடும், சுயநலம் இல்லாமலும் இந்த வாழ்த்துக்களை பயன்படுத்துகிறோமோ அந்த அளவு இதனுடைய பலன் முழுவதையும் நாம் நம் வாழ்வில் அனுபவமாக பெறமுடியும். நமக்குள் சஞ்சித கர்மமும் சமுதாயத்தில் சமுதாய வினையும் இருக்கிறது. இதைப் பொறுத்தே இயற்கை எனும் பேராற்றலால் லாப, நட்டங்கள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எதிர்கால நம்பிக்கையோடு அக்காலத்தை வாழ்த்தி வரவேற்று நம்முடைய ஒவ்வொரு அடியையும், இன்று வாழ்க்கையில் எடுத்து வைப்போம். வாழ்க வளமுடன்
🍂 *இன்றைய மூலிகை*
🍂 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍂 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🍂 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍂 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍂 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍂 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment