நித்தியகடன் செப்டம்பர் 28 2020

🍭➰🍭➰🍭➰🍭➰🍭➰🍭

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 28*

🍭➰🍭➰🍭➰🍭➰🍭➰🍭

👣 *இன்றைய நித்தியகடன்*

👣 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

👣 *இன்றைய சாதகம்*

👣 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

👣 *இன்றைய நற்சிந்தனை*

👣 நம்முடைய பாதங்களை எடுத்து வைத்து நடக்கும்போது, மிகுந்த கவனத்தோடு நடக்க வேண்டும். நம்முடைய பாதச்சுவடுகளை நம்முடைய அடுத்த சந்ததிகள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இன்று எவ்வாறு வாழ்கிறோமோ அதைப் பின்பற்றியே நாளை அவர்களும் வாழப் போகிறார்கள். இன்று நம்முடைய எண்ணம், சொல், செயல் இவை எல்லாம் எப்படி இருக்கிறதோ, அது போலவே அவர்களுடைய நாளைய எண்ணம், சொல், செயல் யாவும் அமையப்போகிறது, என்ற உண்மையை உணர்ந்து நம்முடைய வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்போம்.

👣 *இன்றைய தற்சோதனை*

👣 நாம் நல்ல முறையில் வாழ்ந்து, நம் கருத்தொடர் வழியாக, நமக்கும் அவர்களுக்கும் சேர்த்து வைக்கும், உண்மையான சொத்து என்பது இதுதான் நல்வினை பதிவுகள், நோயற்ற பதிவுகள், இறை உணரக்கூடிய பதிவுகள். இந்த நல்வினை பதிவுகள்தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது, நம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் முடிவு செய்கிறது, இறைவனை உணர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது, என்ற இந்த உண்மைகளையெல்லாம் தற்சோதனை செய்து, அவரவர்களுடைய அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும்.

👣 *இன்றைய பண்புப்பயிற்சி*

👣 தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இவைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் எப்போதும், எங்கேயும், எதற்காகவும், முறை மாறியோ, அளவு மீரியோ செயல்படக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தடம் மாறினாலும், நாம் தடுமாறாமல் குருவின் கரங்களை பற்றிக்கொண்டு, வைராக்கியத்தோடு நின்று நிலைத்து வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த மேன்மையான சொத்தை நம்முடைய சந்ததிகளுக்கு அற்பணித்து, மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...

👣 *இன்றைய மூலிகை*

👣 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

👣 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

👣 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

👣 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

👣 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

👣 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

👣 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments