🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 26*
🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 இரவு என்பதும் பகல் என்பதும் ஒரு மாயத் தோற்றம். இரவும் பகலும் இந்த பூமியை சுற்றி நிரந்தரமாக அப்படியே தான் இருக்கிறது. சூரிய ஒளி படக்கூடிய இடத்தை பகலென்றும், சூரிய ஒளி படாத இடத்தை இரவு என்றும் சொல்லுகின்றோம். பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது, இதன் விளைவாக இந்த இரவு பகல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாமும் நாம் வாழும் நிலப்பகுதியும் இந்த இரவுக்குள்ளும் பகலுக்குள்ளும் பயணம் செய்கிறது என்பது தான் உண்மையாகும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 இதுபோன்ற பல பல உண்மைகள் இந்த பிரபஞ்ச வெளியிலும் நம் உடலுக்குள்ளும் ஏராளமாக இருக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்ற அவ்வையின் வாய் மொழிக்கு ஏற்ப நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை, வானகம், வையகம், உடலகம் முழுவதும் நிரம்ப இருக்கின்றன. அவைகளையெல்லாம் மனஓர்மை பட்ட நிலையில் தற்சோதனை செய்யும் போது தான் அனுபவமாக பெறமுடியும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இவைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த நமக்கு ஒர்மை, சீர்மை, கூர்மை, நேர்மை இந்த நான்கு விதமான பண்புகளும் தேவை. மன ஒர்மை பெற்று, அதில் சீரான சிந்தனையை அமைத்துக் கொண்டு, கூரான அறிவு நுட்பத்தோடு திட்டமிட்டு, நேர்மையாக வாழ்க்கை கடமைகளை ஆற்ற வேண்டும். இந்த மனித வாழ்க்கையானது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமானது அல்ல. உலகம் முழுவதும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் நாம் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஐவகையான கடமைகளையும் ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடித்து கடைதேருவோம்... வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍁 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment