♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 24*
♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️
🐢 *இன்றைய நித்தியகடன்*
🐢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🐢 *இன்றைய சாதகம்*
🐢 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🐢 *இன்றைய நற்சிந்தனை*
🐢 நமது உடலில் உயிர் இயக்கமானது வலச்சுழலாகவும், இடச்சுழலாகவும் மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கும். இந்த குண்டலினி யோக பயிற்சியில் உள்ள அன்பர்கள் உயிர் இயக்கத்தை வலச்சுழலாக சுழலவைத்து இதை முதலில் பழக வேண்டும். அவ்வாறு பழகி மேல் நோக்கு விசைக்கு நம் உயிராற்றலை உயர்த்தி கொண்டால், அடுத்து சுழிமுனை இயக்கத்திற்கு நாம் தயாராகி விடுவோம். சுழிமுனை இயக்கத்திற்கு நாம் தான் செல்வோமே தவிர, வலச்சுழல் என்பது எப்போதும் உடலில் இருந்து கொண்டேதான் இருக்கும்.
🐢 *இன்றைய தற்சோதனை*
🐢 மனப்பக்குவமும், உடல் பக்குவமும் உயிர் வளத்தை பெருக்கும். சீவகாந்தம் நன்றாக திணிவு பெற்ற நிலையில் இந்த வலச்சுழலை விட்டு நாம் தனியாக சுழிமுனையில் பயணம் செய்வோம். சுழிமுனை பயணம்தான் கருமைய பயணமாகும். பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கருந்துளைகளுக்குள் நாம் இணைப்பு பெற முடியும். அதற்கு பலவிதமான தியாகங்களும், நல்ல பழக்கங்களும், பண்புகளும் தேவை.
🐢 *இன்றைய பண்புப்பயிற்சி*
🐢 வேதாத்திரி மகரிஷி இக்கவியில் கூறுவது போல் "புதியதொரு பண்பாடு உலகிற்கு வேண்டும். போதை, போர், பொய், புகை ஒழித்து அமுல் செய்வோம்" இந்தப் பண்பாட்டினை உலகிற்கு நாம்தான் கொண்டு சேர்க்க வேண்டும், என்ற கடமை யோடும் பொறுப்போடும் செயல் புரிவோம் "தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" சகஸ்தாதார வழியில் பயணம் மேற்கொள்வோம். எல்லோருக்கும் பொதுவான இறைவனை மதிப்போம். வாழ்க வளமுடன்...
🐢 *இன்றைய மூலிகை*
🐢 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🐢 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🐢 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🐢 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🐢 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🐢 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment