🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 22*
🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 ஆன்மீக வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு கட்டமாகத்தான், நாம் நம்மை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். அதில் முறையாக உணர்தல், அனுபவித்தல், பிரதிபலித்தல் என்ற இந்த வரிசை மாறாத அனுபவத்தோடு, பயிற்சி முயற்சி என்று வாழ்ந்தால் உயிரை உணராலாம். அதைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 நாம் சரியாகத்தான் உணர்கின்றோமா என்பதற்கு, முன்னமே வாழ்ந்து அதை பதிவு செய்த நம்முடைய குருமார்களின் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, விஞ்ஞானபூர்வமாக ஒரு விஷயத்தில் நாம் தெளிவு பெற வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு எதையும், எவரோடும், எப்போதும், எங்கேயும், எவரிடத்திலும் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளக் கூடாது. நன்றாக தற்சோதனை செய்து தெளிவு பெற்ற பின், அதை தெளிவான சான்றுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து விஞ்ஞானப்பூர்வமாக, உணர்வோடு பகிர்ந்து கொள்ளலாம்.
🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎱 மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகவல்கள் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க வேண்டும், என்ற பண்பில் உயர வேண்டும். இந்தப் பண்பினை உளமாற ஏற்று இதன் வழி வாழத் துவங்கினால் உள்ளதை உணர்ந்து, நல்லதை செய்து,
அல்லது தவிர்த்து வாழும் பண்பும் நமக்குள் ஆழமாக வேரூன்றி வளரத்துவங்கும். மனதின் மாண்பினை மதிப்போடு உயர்த்திக்கொண்டு *மகரிஷியின் இந்த வார்த்தைக்கு ஏட்ப மாநிதியம் இறைநிலையை தம் மனத்தடியில் தேர்வோம்*. வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎱 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment