நித்தியகடன் செப்டம்பர் 21 2020

🌏🍒🌏🍒🌏🍒🌏🍒🌏🍒🌏

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 21*

🌏🍒🌏🍒🌏🍒🌏🍒🌏🍒🌏

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 இறைநிலையில் அடங்கியிருந்த அனைத்தும் மலர துவங்கியது. அதுவே பஞ்ச பூதங்களாகவும், பிரபஞ்சமாகவும், உயிரினங்களாகவும் வரிசையாக தன்னை முறை படுத்திக்கொண்டு மலர்ந்தது. இறுதியாக தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும், என்ற நோக்கத்தோடு உருவானதே மனித தோற்றமும் வளர்ச்சியுமாகும். இது நீண்ட நெடிய திட்டத்திற்குப் பின்னால் இது உருவானது. இறைவனை உணர்வதற்கான அனைத்து அம்சங்களும் மனிதனுக்குள் உள்ளடக்கமாக இருக்கிறது.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 முறையான பயிற்சிகள் மூலமாக அடங்கியிருக்கும் இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இறைவனுக்கும் நமக்குமான இணக்கத் தன்மையை நட்பை படிப்படியாக வளர்த்துக் கொள்ளலாம். முற்காலத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணா, தியானம், சமாதி என்ற அட்டாங்க யோகமாக முற்காலத்தில் நடைமுறையில் இருந்த யோகப் பயிற்சியே தற்காலத்தில் எளிமைப்படுத்தப்பட்டு, எளியமுறை குண்டலினி யோகம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியிருக்கிறார்.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 இந்த பூமியில் உள்ள கடைக்கோடி மனிதர் வரை முக்தி பெறுவதற்கு இந்த பயிற்சியே போதுமானது. முரண்பாடான சிந்தனைகளும் செயல்களும் இருக்குமேயானால், அவர்களுக்கு இதனுடைய நன்மைகள் முழுமையாக உணர்வுக்கு அனுபவத்திற்கு கிடைப்பதில்லை. முறையாக இந்த பயிற்சியில் தன்னை ஆர்வத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் ஐயம் கொள்ளாமல் பயிற்சியோடு தன்னை இணைத்துக் கொண்டு, பயணிக்கும் எவர் ஒருவருக்கும் முக்தி நிலை சித்திக்கும். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🍁 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🍁 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments