🌌⚾🌌⚾🌌⚾🌌⚾🌌⚾🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 20*
🌌⚾🌌⚾🌌⚾🌌⚾🌌⚾🌌
♻️ *இன்றைய நித்தியகடன்*
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
♻️ *இன்றைய சாதகம்*
♻️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
♻️ *இன்றைய நற்சிந்தனை*
♻️ மனித வாழ்க்கையில் அவ்வப்போது தடைகள் ஏற்படும். இந்த தடைகளை எல்லாம் முறையாக பயிற்சிகளை செய்து சரியானதொரு வழிமுறையை பின்பற்றி, தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்தும், கடக்க வேண்டியவைகளை கடந்தும், பங்கேற்க வேண்டியவைகளில் பங்கேற்றும் அடுத்த கட்டத்திற்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாற்றம் என்பது இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாவே கிடையாது. எதிர்வரும் மாற்றங்களை உயர்ந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டியது அவரவருடைய பொறுப்பும் கடமையுமாகும்.
♻️ *இன்றைய தற்சோதனை*
♻️ சமுதாயத்தின் துணையில்லாமலும், நண்பர்கள் துணையில்லாமலும், தனி ஒரு மனிதனாக இருந்து எதையுமே செய்துவிட முடியாது. நாம் நம்முடைய வாழ்க்கையை படிப்படியாக உயர்த்திக் கொள்ள எல்லோரும் தேவை. அனைவரிடத்திலும் நல்ல நட்போடு பழகி வாழுதலே சிறப்பாகும். சுயநலம் கொண்டு எப்போதும் புலன் இன்பங்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எண்ணம், சொல், செயல்களை பயன்படுத்தும் போதெல்லாம் அது புலன் இன்பத்திலேயே அமையும். புலன் இன்பம் என்பது முழுக்க முழுக்க சுயநலத்தை அடிப்படையாக கொண்டதே ஆகும்.
♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*
♻️ நம்மை நாமே கூர்ந்து கவனித்து வாழத் துவங்கி விட்டோமேயானால், சமுதாயத்திற்கும் நமக்கும் நாம் முழுமையாக பயன்படுவோம். நம்முடைய பழக்கவழக்கங்கள் வழியாகத்தான், நமக்கும் நாம் துன்பம் செய்து கொள்கிறோம், மற்றவர்களையும் துன்பத்தில் சிக்கவைத்து விடுகிறோம். கூர்ந்து கவனித்து இவைகளை படிப்படியாக கலைந்து கொண்டால் போதும் ஆன்மீக வாழ்க்கைக்கும் குடும்ப அமைதிக்கும் இதுவே போதுமானதாகவும் நிறைவானதாகவும் இருக்கும். எப்போதும் எங்கேயும் நம்முடைய செயல்கள் அனைத்தும் இயற்கையால் பாதுகாக்கப்படும் வழிநடத்தப்படும். இத்தகைய சிறந்த பண்பை ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...
♻️ *இன்றைய மூலிகை*
♻️ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
♻️ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
♻️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment