நித்தியகடன் செப்டம்பர் 18 2020

🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 18*

🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱

🕳️ *இன்றைய நித்தியகடன்*

🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🕳️ *இன்றைய சாதகம்*

🕳️ வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

🕳️ *இன்றைய நற்சிந்தனை*

🕳️ எதற்கு அருகாமையில் நாம் இருக்கின்றோமோ, அதனுடைய தன்மையும், தரமும், நம் உடலிலும், மனதிலும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இறை நிலைக்கு அருகாமையில் நாம் இருந்தபோதும், நம்முடைய கருமையத்தில் உடல் செல்களில் உயிர் துகள்கள் மீது உள்ள படிமத்தில், விலங்கின பதிவுகள் இருக்கின்றன. இவைகளை நீக்காமல் நாம் இறைநிலையின் தன்மையாகவும் தரமாகவும் முழுமையாக உயர்வு பெற முடியாது.

🕳️ *இன்றைய தற்சோதனை*

🕳️ இந்த விலங்கின பதிவுகளை போக்கிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான், முழுமை நல வாழ்விற்கான மனவளக்கலை பயிற்சிகள். அதில் உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இவை நான்கும் விலங்கினப் பதிவுகளை படிப்படியாக நம்மிடத்தில் இருந்து அகற்றி கோள்களுக்கும் நமக்குமான நட்பையும், இறை நிலைக்கும் நமக்குமான நட்பையும் உயர்த்துகிறது. நாள் தவறாமல் இப்பயிற்சியை செய்து இதை நம் வாழ்க்கை அனுபவமாக பெற வேண்டும்.

🕳️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕳️ உங்களுக்கு அமையும் எந்த ஒரு வாய்ப்பையும் இழந்து விடாமல், முழுமையாக பயன்படுத்தி விழிப்பு நிலையில் வாழ்வதற்கு வைராக்கிய மனதோடு இருந்து, விடாமுயற்சியோடு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது நமக்கும் இறைநிலைக்குமான வழித்தடத்தை உருவாக்கி கொடுக்கும். அதில் மேலும் நம்மை பயணிக்கவும் வைக்கும். மகரிஷியின் இக்கவிக்கு ஏட்ப *"மற்றவரிடம் எதிர்பார்த்தல் கையேந்தல் வேண்டாம் மாநிதியாம் இறைநிலையை தம்மனத்தடியில் தேர்வோம்"* என்ற ஞான நிலையில் உயர்வு காணமுடியும். வாழ்க வளமுடன்...

🕳️ *இன்றைய மூலிகை*

🕳️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🕳️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🕳️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🕳️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕳️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕳️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments