நித்தியகடன் செப்டம்பர் 16 2020

⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 16*

⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️♻️⏹️

🕸️ *இன்றைய நித்தியகடன்*

🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🕸️ *இன்றைய சாதகம்*

🕸️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🕸️ *இன்றைய நற்சிந்தனை*

🕸️ நம்முடைய எண்ணங்களை எல்லாம் ஆய்வு செய்து, சல்லடை போட்டு சலித்து பார்த்தால் இறுதியாக, ஒரு எண்ணம் கூட நம்முடைய சொந்த எண்ணமாக இருக்காது. அனைத்து வகையான எண்ணங்களும் வாடகை எண்ணங்கள். பிறர் மனத் தூண்டுதல்களுக்கு இவ்வளவு காலமாக, நாம் நம்முடைய செயல்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம், என்ற உண்மை தெள்ளத்தெளிவாக உணரப்படும். இந்த நிலவுலகில் மீது இவ்வளவு காலமாக நாம் ஒரு வாடகை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை உணர முடியும்.

🕸️ *இன்றைய தற்சோதனை*

🕸️ இந்த நிலைமையை மாற்றி அமைக்கவும், இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும், நாம் உயிருக்குள் எவ்வளவு தூரம் நாம் ஆழமாக செய்கிறோமோ, அதனை பொறுத்து புறத்தில் நம்முடைய செயல்கள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்படும். அகத்தூய்மை இல்லாமல் புறத்தூய்மை கிடையாது. அதுவும் குறிப்பாக உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவு முறையை பின்பற்ற வேண்டுமானால் அகநோக்கு பயணத்தில், நம்மை ஆழமாக கொண்டு சென்று அங்கேயே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕸️ இந்த பயணத்தின் போது நமக்கு நிறைய இடையூறுகள் இடர்பாடுகள் உருவாகலாம், நிச்சயமாக உருவாகும். அவைகளை எல்லாம் சரியான முறையில் கலை எடுத்துக்கொண்டு தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து, கடக்க வேண்டியவைகளை கடந்து, பிழைகளை எல்லாம் நாம் சீர்திருத்தி கொள்ளும் பண்பில் உயர வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு மனவளக்கலை பயிற்சி நான்கும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும், வழி நடத்துவதாகவும் அமையும். வாழ்க வளமுடன்...

🕸️ *இன்றைய மூலிகை*

🕸️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🕸️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕸️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments