💢💦💢💦💢💦💢💦💢💦💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 15*
💢💦💢💦💢💦💢💦💢💦💢
🌁 *இன்றைய நித்தியகடன்*
🌁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌁 *இன்றைய சாதகம்*
🌁 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌁 *இன்றைய நற்சிந்தனை*
🌁 பழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த வாய்ப்புதான் இந்த வாழ்த்து. வாழ்த்தானது நமக்கு உள்ளும், புறமும் இருந்து எப்போதும் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும், உறுதுணையாகவும், இருக்கும் தெய்வீக பேராற்றலும், அருள் பேராற்றலும் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளுங்கள். தவறாக புரிதலை ஏற்படுத்திக் கொண்டு சுயநலத்துக்கு இவைகளை பயன்படுத்தாதீர்கள்.
🌁 *இன்றைய தற்சோதனை*
🌁 அருள் காப்பையும் வாழ்த்தையும் நல்ல முறையில் பயன்படுத்தி, நம்முடைய வாழ்க்கை பாதையில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் இன்னல்களையும் கலந்து கொள்ளலாம். இப்படித்தான் நடக்க வேண்டும், இது எனக்கு தேவை, என்ற சுயநல நோக்கோடு பயன்படுத்தினால் இவைகள் பலன் அளிக்காது, என்ற உண்மையை உணர்வோமாக. அருள் பேராற்றலுக்கு தெரியும், நாம் யார்? நாம் எந்த நோக்கத்தோடு செயல்படுகிறோம்? என்ற புள்ளி விவரங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு தான் பலனை அளிக்கும்.
🌁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌁 உடல் தூய்மை, உயிர் தூய்மை, மனத்தூய்மை இவைகளை எல்லாம் சரியாக அமைத்துக் கொண்டு, பக்குவப்படுத்தி அதன்பின் பரவலாக வாழ்க்கையில் அருள் காப்பை தங்குதடையின்றி இயல்பாகவே பயன்படுத்தலாம். நம்முடைய நோக்கத்தையும் சரியாக நமக்கு அடையாளப் படுத்திக் கொள்வது என்பது மிகவும் முக்கியமாகும். அருட்பேராற்றலோடு இணைவது என்பது, தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு அதன் வழியாக வாழ்ந்துகாட்டும் இறைஞானப்பண்பாகும்.வாழ்க வளமுடன்.
🌁 *இன்றைய மூலிகை*
🌁 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌁 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌁 மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment