நித்தியகடன் செப்டம்பர் 14 2020

🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 14*

🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘

🛤️ *இன்றைய நித்தியகடன்*

🛤️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🛤️ *இன்றைய சாதகம்*

🛤️ திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🛤️ *இன்றைய நற்சிந்தனை*

🛤️ மீண்டும் மீண்டும் நம்முடைய பழக்கங்கள் நம்மை கீழ்நோக்கி இழுக்கும். நம்மை திசைதிருப்பி மயக்கி தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, முழு ஆற்றலோடும் திறமையோடும் முயற்சி செய்யும்.அப்படியானால் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், நாம் மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இந்த மேல்நோக்கு பயணத்திற்கு உயிரையும், உடலையும், மனதையும் தயார்படுத்த வேண்டும். நாம் முறையாக அவைகளை தயார் படுத்தவில்லை என்றால், இந்த பயணம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

🛤️ *இன்றைய தற்சோதனை*

🛤️ எப்படி ஒரு ராக்கெட் மேல் நோக்கி பயணம் செய்ய அதில் தேவையான விசை இருக்க வேண்டுமோ, அது போல தான் நம்முடைய உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் போதிய ஆற்றல் விசை தேவைகளை உற்பத்தி செய்வதுதான், மனவளக்கலை பயிற்சி முறைகள் நான்கும் ஆகும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கின் வழியாக ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்த ஆற்றலை முறையாக நாம் பயன்படுத்தி பயன் காணவேண்டும்.

🛤️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🛤️ இக்காலகட்டத்தில் மிகுந்த கவனத்தோடு இருந்து, நாம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் ஆற்றல் அதிகரிக்கும் போது, நமக்கு புலன் வயப்பட்ட பழைய பழக்கங்கள் மீண்டும் தொற்றுநோய் போல தொற்றிக்கொள்ள, வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஆக தெளிவோடு நம்மை பழைய பழக்கங்களுக்குள் சிக்க வைத்துக் கொள்ளாமல், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொண்டு இந்த மேல்நோக்கு பயணத்தை, வெற்றிகரமாக துவங்கி நிறைவு செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்...

🛤️ *இன்றைய மூலிகை*

🛤️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🛤️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🛤️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🛤️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🛤️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🛤️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🛤️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments