🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 13*
🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥
💯 *இன்றைய நித்தியகடன்*
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💯 *இன்றைய சாதகம்*
💯 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
💯 *இன்றைய நற்சிந்தனை*
💯 நம்மை சுற்றி இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள், சமுதாயத்தினர் நமக்கு நிறைய வழிகாட்டுதல்களை தெரிவிக்கலாம். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதும் மதிப்புக் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு. இந்த பண்பு தான் ஒரு மனிதனை மனிதன் ஆக்க வல்லது. ஆனால் நமக்கான வாழ்க்கை பாதையை நாம்தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் விளைவுகளை ஆய்வு செய்து முறையாக அந்த செயல்களை ஏற்பதுதான் அறிவுபூர்வமானதாகும். எதிர்கால வாழ்க்கை என்பது தற்காலத்தில் எடுக்கும் முடிவினால் திட்டத்தினால் தான் அமைகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
💯 *இன்றைய தற்சோதனை*
💯 ஒருவருடைய அனுபவம் மற்றவர்களுக்கு பொருந்துமா என்றால், அதை ஒரு தகவலாக வைத்துக்கொண்டு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அப்படியே அது நமக்கும் நடக்குமென்று எதிர்பார்த்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை பயணம் என்பது இருக்கிறது. அதை கண்டறிந்து அதில் பயணிப்பது தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய எதிர்காலத்திற்கும் நல்லது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் "சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே நீ தெளிவாய்"
💯 *இன்றைய பண்புப்பயிற்சி*
💯 சுயமாக சிந்திப்பது கொஞ்சம் முறைமாறி வேறு வழியில் பயணம் செய்தால், அதுவே தான் தன் முனைப்பாக மாறிவிடும். ஆக மிகுந்த கவனத்தோடு இந்த சுயசிந்தனை கொள்கையை, புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் நல்வினையும் தீவினையும் இருக்கின்றன. கொஞ்சம் வழிமாறி திசை திரும்பினாலும், அது நம்மை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். வாழ்க வளமுடன்...
💯 *இன்றைய மூலிகை*
💯 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
💯 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment