*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 12*
🎼⏳🎼⏳🎼⏳🎼⏳🎼⏳🎼
🌤️ *இன்றைய நித்தியகடன்*
🌤️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌤️ *இன்றைய சாதகம்*
🌤️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌤️ *இன்றைய நற்சிந்தனை*
🌤️ இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து உயிர்களின்இயக்க தன் மாற்றங்களும், உற்பத்தி இரகசியங்களும் நம்முடைய கருமையத்துக்குள் இருக்கிறது. அதேபோல வான்காந்தத்திலும் இருக்கிறது. இந்த சீவகாந்தமும் வான்காந்தமும் ஒன்றாக இணைந்து இயங்கும்போது, மூளை செல்கள் வழியாக நமக்கு புதிய புதிய அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதைத்தான் பிரபஞ்ச தன்மாற்றம் ரகசியங்களை உணர்ந்த ஞானம் என்று பேசுகிறோம்.
🌤️ *இன்றைய தற்சோதனை*
🌤️ பிரபஞ்ச வெளியோடு மனதை இணைத்தும், கருமையத்துக்குள் ஒடுங்கியும் ஒன்றி கலந்து அதுவாகி, தவத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் முறைக்கும் தன்மைக்கும் ஏற்ப, இந்த பிரபஞ்ச ரகசியங்கள் அனுபவமாக கிடைக்கும். எந்த அனுபவத்தை நாம் பெற்றாலும் அது இயல்பான அமைப்பே ஆகும். இதில் மிகை படுத்திக்கொண்டு சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இயற்கை அமைப்பில் எதுவுமே இல்லை.
🌤️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🌤️ பணிவாக இருந்து பண்போடு நம்மை நாம் வழிநடத்த பழக வேண்டும். மிகைப்படுத்தி சிந்தித்தோ செயல்பட்டோ, நமக்கு மேலும் கிடைக்கவேண்டிய அனுபவங்களை இழந்துவிடக்கூடாது. நேற்று நான் நடந்து கொண்ட முறைக்குத் தகுந்தவாறு, இன்று நம்முடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. இன்று நாம் நடந்து கொள்ளும் முறைக்கு தக்கவாறு, நாளைய எதிர்காலம் அமையப்போகிறது. இந்த உண்மையை தெளிவாக புரிந்துகொண்டு உயர் ஞான நிலை அமைப்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌤️ *இன்றைய மூலிகை*
🌤️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌤️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌤️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌤️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌤️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌤️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment