🌸🔶🌸🔶🌸🔶🌸🔶🌸🔶🌸
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 11*
🌸🔶🌸🔶🌸🔶🌸🔶🌸🔶🌸
🌈 *இன்றைய நித்தியகடன்*
🌈 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌈 *இன்றைய சாதகம்*
🌈 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🌈 *இன்றைய நற்சிந்தனை*
🌈 மனதில், உடலில், நோய்களும், குழப்பங்களும், தேங்கவோ வளர்ச்சி பெறவோ கூடாது. நோய்த்தேக்கமும் குழப்பமும் வளர்ச்சி பெற்றால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எந்த ஒன்றை செய்வதாக இருந்தாலும், அதற்கு நிறைய தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருக்கும். சீரான ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் இருக்கவேண்டும். தெளிவான மனநிலையோடு எப்போதும் சிந்தித்து, விளைவை அறிந்த விழிப்பு நிலையோடு வாழ வேண்டும்.
🌈 *இன்றைய தற்சோதனை*
🌈 நேரடியாகவும், மறைமுகமாகவும், தன்னிலை உணர்ந்த மகான்களும், மகரிஷிகளும் நம்மை வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களும், நமக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னதாக நம்முடைய தாய் தந்தை அவர்களுடைய வாழ்த்துக்கள், இந்த ஆன்மிக வாழ்க்கையிலும், லவ்கிக வாழ்க்கையிலும் வெற்றி பெற பேருதவியாக அமைகிறது.
🌈 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌈 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளையெல்லாம் நாள் தவறாமல் செய்யக்கூடிய பண்பில் நாம் உயர்ந்து கொண்டே வரும்போது, நமக்கு உள்ளத் துணிவும் மனதில் தெளிவும் உருவாகும். இதன் விளைவாக நாம் நம்மையும் மதிக்கத்துவங்குவோம். நம்மை சார்ந்தவர்களையும் மதிப்போடு நடத்துவோம். தன் மதிப்பு உணராத மனிதருக்கு மற்றவர்களுடைய மதிப்பையும் மதிக்கவும் தெரியாது, மதிக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. வேதாத்திரியம் தன்னிலை விளக்கத்தை தெளிவாக நமக்கு அனுபவமாக்குகிறது. இவ்வனுபவத்தோடு நாமும் நம் குடும்பமும் நலம்பெற வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌈 *இன்றைய மூலிகை*
🌈 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🌈 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🌈 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🌈 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌈 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌈 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌈 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment