நித்தியகடன் செப்டம்பர் 10 2020

❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 10*

❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️

🌿 *இன்றைய நித்தியகடன்*

🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌿 *இன்றைய சாதகம்*

🌿 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🌿 *இன்றைய நற்சிந்தனை*

🌿 நம்முடைய ஒவ்வொரு புலன்களுடைய உள்ளமைப்பில் அவைகள் உருவானதினுடைய காரணங்களும், படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வதற்காக தீட்டப்பட்ட திட்டங்களும், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் ரகசியங்களும், ஒவ்வொரு புலன்களுடைய உட்பகுதியில் தகவல் பெட்டகத்துக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம், தான் உணர்ந்து கொண்ட காரணத்தினால் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பஞ்சேந்திரிய தவத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். இத்தவத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் போது புலன்களைக் கடப்பதற்கான வழிமுறைகள் அனைத்தும் நம் எண்ணங்களாக மலரும்.

🌿 *இன்றைய தற்சோதனை*

🌿 பஞ்சேந்திரிய தவத்தை தற்சோதனை செய்து பாருங்கள். ஒவ்வொரு புலன்கள் மீதும் மனதை செலுத்தி அங்கு காந்தத்தை குவிக்கும் போது, புலன்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது, அவைகளுக்கும் நமக்குமான இணக்கத்தன்மை எவ்வாறெல்லாம் அமைகிறது, என்பதையெல்லாம் தற்சோதனை செய்யுங்கள். அந்த ஆழமான உண்மைகளோடு உங்களை இணைத்துக் கொண்டு, அகநோக்கு பயணத்தில் இனிமையாக பயணித்து பாருங்கள்.

🌿 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌿 வேதாத்திரி மகரிஷி அவர்கள் "உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விளங்க இன்ப ஊற்றாய் அறிவாய் இயங்கும் பராபரமே" பேரானந்த நிலையை அனுபவத்தை கவிதையில் எழுதி, இதே அனுபவத்தை தம்மக்களும் பெற வேண்டுமென்ற உள்ள ஆர்வத்தோடு, நமக்கு உருவாக்கி கொடுத்து இருப்பதே உலக சமுதாய சேவா சங்கமாகும். இச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நாம் மிகவும் பாக்கியசாலிகள். என்ன புண்ணியம் செய்தோமோ இப்பேறு பெறுவதற்கு. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...

🌿 *இன்றைய மூலிகை*

🌿 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🌿 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌿 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments