நித்தியகடன் செப்டம்பர் 09 2020

🎲🍭🎲🍭🎲🍭🎲🍭🎲🍭🎲

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 09*

🎲🍭🎲🍭🎲🍭🎲🍭🎲🍭🎲

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 நம்முடைய வாழ்க்கை வட்டத்துக்குள் உருவாகும், எந்த ஒரு சூழ்நிலைக்கும் நாம் அடிமையாக இருக்கக் கூடாது. பற்றுதலும், ஒற்றுதலும் இல்லாமல் நம் கடமைகளை சரியாக செய்து விட்டு நிறைவாக வாழ வேண்டும். இந்த கருத்தினை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதற்கான இடத்தில் மனம் நிலைத்து, அறிவு மறந்துவிட்டால் இதுதான் மிகவும் பொருத்தமானது, என்ற எண்ணம் மேலோங்கும், சுலபமாக வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தவும் முடியும்.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 கடமைகளை சரியாக செய்வதற்கு பற்றுதலும், ஒற்றுதலும் தேவையில்லை. தெளிவு இருந்தால் போதும், நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய செயல் எதுவானாலும், அவற்றுக்கு நாம் நம்மை அடிமையாக்கி கொள்ளக்கூடாது. உணர்ச்சிவயப்படாமல் எந்த ஒரு செயலிலும் விளைவை உணர்ந்த விழிப்பு நிலையோடு இருந்து, மயக்கம் நீங்கி செயல் செய்ய வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமேயானால் உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இவற்றுக்கு கூட நாம் அடிமையாக இருக்கக் கூடாது.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை  இயந்திர தன்மையோடு ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அவ்வாறே அவைகளை செய்யவும் கூடாது. மேலும் வெறும் பழக்கமாக எந்த ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், அதையும் தாண்டி அவைகளோடு தொடர்பு கொள்ளும் தருணங்களில், அந்த செயலுக்கும் உங்களுக்கும் இடையில் நின்று சாட்சியாக  கூர்ந்து கவனித்துப் பழகுங்கள். இதன் விளைவாக "பதம் அடைந்தோம் ஒன்றானோம் பரமானந்தம்" என்ற நிலை உருவாகும். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🍁 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments