வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 07
🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 இறைநிலையின் நீண்ட நெடிய தன்மாற்ற சரித்திரத்தில் நமக்கு அமைந்திருக்கும் வாய்ப்புகள் எல்லாம் மிகவும் அற்புதமானவை. அதற்கான முயற்சியில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த பேரியக்க மண்டலத்தில் இருக்கக்கூடிய எதனோடும் நம்மால் இணைய முடியும். இணைந்து அதற்கும் நமக்குமான நட்பை உறவை உயர்த்திக் கொள்ள முடியும். அவைகளுக்கும் நமக்குமான இடைப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய, உற்பத்தி ரகசியங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். எந்த ஒரு மயக்கமும் இல்லாமல் இந்த பிரபஞ்ச உண்மைகளை பற்றி தெளிவாக உணர்ந்துகொண்டு உலகத்தாருக்கு எடுத்துரைக்க முடியும். இதற்கு தேவையானவை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தகுதி உயர்வு...
🎱 இன்றைய தற்சோதனை
🎱 உடல், உயிர், மனம் இந்த மூன்றினுடைய தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். முழுமையான உடல் தகுதி, உயிர் தகுதி, மனத் தகுதியை அமைத்துக்கொண்டால் பிரபஞ்ச பேருண்மைகள் அனைத்தையும் நாம் சந்தேகம் இல்லாமல், பயம் இல்லாமல், தெள்ளத் தெளிவாக உணர முடியும். கண்களுக்கு புலப்படாத உண்மைகளை உணர்ந்து தெளிவு பெற முடியும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே போராடாமல், அமைதியோடும் பேரின்பத்தோடும் வாழமுடியும். பாதங்களுக்கு கீழாக இருக்கக்கூடிய மண்ணிலிருந்து, தலைக்கு மேலே இருக்கக்கூடிய விண் வரை, அனைத்து விதமான இயக்கங்களையும், அதன் உற்பத்தி இரகசியங்களையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 இவை அனைத்தையும் நமக்குள் நடத்திக் கொள்வதற்கு நற்பண்புகள் நம்முள் உயர்ந்தோங்கி வளரவேண்டும். இந்த பண்புகள் தான் நமக்கான தளத்தை உருவாக்கி தருகின்றன. விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம், உள்ளதை உள்ளவாறு உணர்தல், அல்லதை தவிர்த்தல், நல்லது செய்தல், "தனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லது நினைப்பதும் செய்வதும் நித்திய கடன்", என்ற பண்புகளை எல்லாம் நமக்குள் ஆழமாக வேரூன்றச் செய்துகொண்டு புறத்தில் அதற்கான செயல்களையெல்லாம் செய்யும்போது, பிரபஞ்சமும் நாமும் வேறு வேறு அல்ல, நானே பிரபஞ்சம் பிரபஞ்சமே நான், என்ற உண்மை தெளிவாகப் புரிந்துவிடும். புரிதலை ஏற்படுத்திக் கொண்டு புண்ணிய நிலைகளில் பயணிப்போம். நாமும் நம் குடும்பமும் நலமுற வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🎱 இன்றைய மூலிகை
🎱 அருகம்புல் பானம் ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🎱 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🎱 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🎱 ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
🎱 குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎱 மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment