நினைத்ததை சாதிக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

வாழ்க வளமுடன்
 நினைத்ததை சாதிக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்க தவம் ஈண்டு முயலப் படும்" என்கிறார் வள்ளுவர்."உன்னால் எதையும் செய்ய முடியும் "என்கிறார் விவேகானந்தர். "எதை விரும்புகிறீர்களோ அந்த அலைச் சுழலுக்கு நீங்கள் மாறிக் கொண்டால் நீங்கள் விரும்புவது கிடைக்கும்" என்கிறார் ஐன்ஸ்டீன். 100% நாம் நினைப்பதைச் சாதிக்க முடியும்.ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு.
 மனம் குறித்த அடிப்படை விஷயங்கள்
 மேல்மனம் முடிவு எடுக்கும் எஜமானன். உலகத்தோடு தொடர்பு கொள்ளும் மனம்.இதை " புத்தி " என்பார் மகரிஷி. நடுமனம் எஜமானன் சொன்னதை அப்படியே செய்யும்.நாம் எண்ணுவதைச் செயல்படுத்துவது இம்மனம் தான். செயல் புரிவதற்க்கான சக்திதருவதும் இதுதான். இதனை சக்தி வாய்ந்த வேலைக்காரன் என்பர். சொன்னதை அப்படியே செய்யும்.உண்மை,பொய் , நல்லது, கெட்டது என்று ஆராயாமல் செய்யும்.ஒருவர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று பயிற்சி செய்கிறார். உடலுறுப்புகள் இயங்குகிறது. கற்பனையாக பயிற்சி செய்வது போல் எண்ணினாலும் 90% உடலுறுப்புகள் உண்மையில் செய்யும் போது இயங்குவது போல் இயங்குகிறது.நடுமனம் இயங்குவதால் இது சாத்தியம் ஆகிறது. மேல்மனப்பதிவு தொடர்ந்து எண்ணும்போது நடுமனப் பதிவாக மாறுகிறது.
 அடிமனம்  இறைநிலையிடம் தொடர்புடையது. அகங்காரம் என்பார்.  மகரிஷி
 மனம் இரு வகையில் செயல்படுகிறது
1) சிந்திக்கும் போது எண்ணமாக
2) அனுபவிக்கும் போது
உணர்வாக
 எண்ணம்
1) எண்ணத்தை வலிமைப்படுத்த வேண்டும்.
# கோடிக்கணக்கான முறை எண்ணுவது
# சிறந்த சங்கல்பம் உருவாக்கி சொல்லுதல்
# கண்ணாடிப் பயிற்சி முடிவில் சிறப்பு சங்கற்பங்களைச் சொல்லுதல்
2) செயலாக்கத் திட்டமிட்டு செயலாற்றுதல்.
உடற் எடைக் குறைக்கனும் என்பவர்கள் சங்கல்பம் செய்தால் மட்டும் போதாது. அதற்கான உணவுமுறை, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
 உணர்வு
3) நிறை மனம் பெற வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
போதும் என்ற மனம் கொள்ள வேண்டும்.நடப்பது நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். ( தவமும், தற்சோதனையுமே வழி)
4) தவிர்க்க வேண்டியவைகள்
மனதில் தேவையற்றவைகள் இருந்தால் நம்மால் சாதிக்க முடியாது. முந்திரி தோட்டத்தில் கருவேல மரங்களை வளர்ப்போமா? வளர்த்தால் முந்திரி விளைச்சல் வருமா?
 கருவேலமரங்கள் 10  தவிர்க்க வேண்டியவைகள்
# சினம்( சீவகாந்தம் தரம் கெட்டுவிடும்)
# வெறுப்புணர்வு
# அவசியமற்ற பயம்
# அதிகார போதை
# பொறாமை
# பேராசை
#வஞ்சம்
# தற்பெருமை
# அவமதிப்பு
# முறையற்ற பால் கவர்ச்சி. இறுதியாக,
எண்ணத்திற்கு வலுசேர்த்து, செயாலாக்க முயன்று,நிறைமனத்துடன், தேவையற்ற கருவேல மரங்களை வெட்டி வீழ்த்தினால் நினைத்ததைச் சாதிக்கலாம்.
முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பது தன்னம்பிக்கை.
 நன்றி: பேரா.முத்து ஐயா 

Comments