வாழ்க வளமுடன்!
நாம் பேசும் போதும், மற்றவர்களுடன் பழகும் போதும், குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, கீழ்க்காணும் ஆறு வாக்கியங்களை நினைவில் கொண்டு பயன்படுத்தும் போது எல்லா விஷயங்களும் சுமூகமாய் முடியும்.
1. நாங்கள். WE
2. நன்றி. THANK YOU
3.உங்களுக்குச் சிரமமா? WOULD YOU MIND?
4.உங்கள் கருத்து?
WHAT IS YOUR OPINION?
5.நீ வேலையை நன்றாக செய்தாய்.
YOU DID A GOOD JOB.
6.என் தவறை ஒத்துக் கொள்கிறேன்.
I ADMIT I MADE A MISTAKE.
மேலும் திருப்பூர் பேராசிரியர் தம் சொற்பொழிவில் ஒரு அரிய கருத்து சொல்லியிருந்தார்.. அனைவருடனும் இணக்கத் தன்மை வளர்க்க " ஆமா" ( yes)
என்ற வார்த்தை பெரிதும் பயன்படுவதாகச் சொல்லி இருந்தார். இரு மனங்களை இணைப்பதோடு இரு சமயங்களையே இணைத்த பெருமை உடையது " ஆமா" என்ற வார்த்தை. சைவ உலகில் பெரிதும் போற்றப்படுபவர் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர். இவர் தம் திருவெம்பாவை நூலில் முதற் பாடலை " ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை" எனத் தொடங்கி இருப்பார். முதல் எழுத்து ஆ
வைணவ உலகில் 12 ஆழ்வார்களில் ஒரு பெண், பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் நாச்சியார், தாம் எழுதிய திருப்பாவை நூலில் முதற்பாடலை " மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்" எனப் பாடியிருப்பார். முதல் எழுத்து மா.
இரண்டெழுத்தையும் சேர்க்க ஆமா
இது சைவ, வைணவ சமயங்களை இணைத்தது என்பர்.
மாணிக்கவாசகர், ஆண்டாளைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆ எனத் தொடங்கிப் பாடியதாகவும், ஆண்டாள், மாணிக்கவாசகரைப் பெருமைப்படுத்தும் விதமாக மா எனப் பாடியதாகவும் முன்னோர் விளக்கம் கொள்வர். இதை இணைத்துக் கூறி ஆமா என்ற சொல் உருவாக்கி விளக்கம் தந்தார் பேராசிரியர்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா

Comments
Post a Comment