பாபநாசம்

வாழ்க வளமுடன்!
 *பாபநாசம்*
தாமிரபரணி ஆறு திசை மாறி பயணிக்கும் இடம் பாபநாசம்.
தஞ்சாவூருக்கு அருகிலும் ஒரு பாபநாசம் உண்டு.
ஆறுகள் திசை மாறி பயணிக்கும் இடங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவ்வகையில் ஈரோட்டுக்கு அருகில்( காவேரி )
கொடுமுடி என்ற ஊர். இவையெல்லாம் பாவத்தை நீக்கும் புண்ணியத் தலங்கள்.
 *பாபத்தை நாசம் செய்வது* *எப்படி?* 
இரண்டொழுக்கப் பண்பாட்டை முழுமையாக கடை பிடியுங்கள். அதுவே போதும்.
உலகத்தில் உள்ள *இருவிதசெயல்கள்* 
1. துன்பம் தரும் செயல்
2. துன்பம் நீக்கும் செயல்
செயலின் *விளைவைக்* கொண்டே பாவம், புண்ணியம் தீர்மானிக்கப் படுகிறது.
 உதாரணம்.1.பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது.
உதாரணம் 2. திருமண பத்திரிகை கொடுக்க வந்தவரை வற்புறுத்திச் சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் எனக் கூறி உணவளிப்பது.
உணவளிப்பது *புண்ணியம்* தான். முதல் உதாரணத்தில் உணவு உண்டவர் பசியாறி இன்பப் படுகிறார். அதனால் புண்ணியம். இரண்டாவது உதாரணத்தில் உணவு உண்டவர் வயிறு சரியில்லையே எனச் சங்கடப்பட்டு மருந்து எடுத்துக் கொள்கிறார்; துன்பப்படுகிறார். இது பாவம்.
கருமையத்தில் பாவங்கள் சேரும். சேர்ந்த பாவங்களைப்  புண்ணியத்தால் குறைக்கத் தான் முடியுமே தவிர புண்ணியம் சேராது. வங்கியில் லோன் ₹1,00,000 வாங்கியிருக்கிறார். மாதம் ₹10,000 வீதம் 4 மாதங்கள் கட்டுகிறார்.  லோனில் ₹40,000 குறைந்து இருக்குமே ஒழிய கட்டிய ₹ 40,000 பணத்தில் இருந்து பணம் எடுக்க முடியுமா என்ன?
லோனைக் கருமையப் பாவப் பதிவுகள் எனக் கொண்டால், திரும்பக் கட்டும் பணம் பாவத்தைக் குறைக்கும் புண்ணியம் எனக் கொள்ளலாம்.பாவங்கள் பாதித் தெரிந்து செய்கிறோம்.பாதி தெரியாது செய்கிறோம். ஆடு வெட்டும்போது ஏற்படும் அலறல் ஓசையைக் கேட்டால் கூடப் பாவமாம். நாம்  இது பாவம் எனத் தெரிந்தே செய்கிறோம்.பொய் சொல்லக் கூடாது எனத் தெரியும். ஆனால் சொல்கிறோம் அல்லவா?
 *பாவத்தின் அடையாளம்*
1. உடலிலே நோய்
2. உள்ளத்திலே களங்கம்
நோய் தீர்க்க மருத்துவமனைகள்.
களங்கம் தீர்க்க மனவளக் கலை மையங்கள்.
6 நல்ல குணங்களைச் சொல்லுங்கள் என்றால் யோசித்து யோசித்துத் தான் சொல்வோம்.
நிறைமனம்,பொறுமை,ஈகை, கற்பு,நேர்நிறையுணர்வு, மன்னிப்பு என்று. தீய குணங்கள் என்றவுடன் சரளமாக வரும். நல்லவை *கடிதத்தில்* வந்தால், தீயவை *தந்தியாக* வருமாம்.
 *பாவங்களின்__* *தன்மைப்* பொறுத்து தான் *மரணம்* கூட வருமாம். உடலுக்கும் தெரியாமல் தூக்கத்தில் சம்பவிக்க வேணுமாம். பாவப்பதிவு கழிந்தால் தான் அது சாத்தியம்.
சிலரின் மரணம் தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளின் போதே நிகழ்ந்திருக்கிறது.
1. அப்துல் கலாம் ஐயா மேடையில் பேசும் போதே
2. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா கம்பன் விழாவில் பேச்சினைக் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே
 *இறைவனிடம் வேண்டுகோள்*
1.எனக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் என் நன்றிகள்.
2.நீ கொடுக்க நினைப்பதற்கும் நன்றிகள்.
நன்றி சொல்ல பழகுங்கள்.
 *இறுதியாக*
1.கற்றதை மற்றவருக்குச் சொல்லுங்கள்.
2.காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்பதை உணரனும்.
3.நம் பாபநாசம்,மனவளக்கலை மன்றங்களும், அறிவுத் திருக்கோவில்களும் என்பதை உணர்வோம்.
 *நன்றி:  திருப்பூர்..பேரா. நாராயணன்* *ஐயா*
நன்றி! வாழ்க வளமுடன்!!

Comments