வாழ்க வளமுடன்
ஆனந்தமாகக் கற்பிப்பது எப்படி
அம்மாவிற்கு இல்லாத சிறப்பு ஒரு குருவிற்கு எப்படி வருகிறதென்றால், அம்மா இத்தலைமுறைக்கான உயிரை மட்டுமே தருகிறார். குருவோ பல தலைமுறைகளுக்கு அறிவைத் தன் குரு, சீடப்பரம்பரை மூலம் கடத்துகிறார்.( முன்னாள் சீடன் தற்போதைய குரு) அம்மாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர். கற்றுக் கொடுப்பதில் மூன்று அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றனும்.
1) வேலை செய்வதை( கற்றுத் தருவதை) மகிழ்ச்சியாக செய்யனும், முழு ஈடுபாடு கொள்ளனும். அதற்கு மனநிலை மகிழ்ச்சியாக இருக்கனும்.
2)கற்றுத்தரும் பாடத்தின் மீது விருப்பம் இருக்கனும். பாட சம்பந்தமாக புத்தகங்களைப் படிக்கனும், கேட்கும் கலையை வளர்க்கனும், தயாரித்து கற்பிக்கனும்.
3) மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளனும்.தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளனும்.
ஆன்மீக ஆசிரியராக வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்:
1) இன்முகம்
2)நேர்மை
3) ஆரோக்கியம்
4) உதவிசெய்யும் குணம்
5)சகிப்புத் தன்மை
6)பொறுமை
7)ஆக்கத்திறன்
8) நேர்மறை எண்ணம்
9) கருத்துவளம்
10)நகைச்சுவை உணர்வு
நம் மனப்பான்மை மாறினால் பிறருடன் நம் அணுகுமுறை மாறும். இதனால் நம் வாழ்வில் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இதனால் நம் வாழ்வு மாறும். இத்தகைய மாற்றம் கண்ட மற்றவர் வாழ்வு மாற நாம் ஒரு முன்னுதாரணமாக இருப்போம். அதுவே மகிழ்வு.
நன்றி: பேரா.சத்தியமூர்த்தி
நன்றி! வாழ்க வளமுடன்!!
Comments
Post a Comment