💢♠️💢♠️💢♠️💢♠️💢♠️💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 30*
💢♠️💢♠️💢♠️💢♠️💢♠️💢
🌌 *இன்றைய நித்தியக்கடன்*
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌌 *இன்றைய சாதகம்*
🌌 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌌 *இன்றைய நற்சிந்தனை*
🌌 உடல், உயிர், மனம் இந்த மூன்றின் வழியாகவும் நாம் பல்வேறு முறைகளில் இறைநிலையின் தன் மாற்ற சரித்திர உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் பிரிந்து பிரிந்து இயங்கிக் கொண்டிருக்கும், இதன் நீதியை நாமும் பல்வேறு முறைகளில் முயற்சித்தால் தான் உணர முடியும். நமக்கு உள்ளும், புறமும், மேலும், கீழும் என நீக்கமற நிறைந்து எல்லாமுமாய் இருக்கும். இறைவனை நாமும் எல்லா வழி முறைகளையும் பயன்படுத்தி உணரமுயற்சிப்போம்.
🌌 *இன்றைய தற்சோதனை*
🌌 இவ்வாறாக முயற்சி செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பும் கடமையுமாகும். இந்த கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்து முடித்துவிட்டு விளைவை எதிர்பார்க்காமல் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். அவனுடைய நீதியானது ஒருநாளும் ஒரு பொழுதும் பிழையாக இருக்காது. என்ன நடந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு மீண்டும் முயற்சிப்போம், முடியும் என்ற நம்பிக்கையோடு...
🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌌 புதிய முயற்சி, புதிய அனுபவம், புதிய பாதை எல்லாமும் புதிதாகவே இருக்கும். இதன் விளைவாக ஏற்படும் அனுபவங்களை மிகைப்படுத்தி புரிந்துகொண்டோ, சிந்தித்தோ வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கி கொள்ளாதீர்கள். எதையும் எதிர்பாராமல் இருப்பது இறைநிலையை உணர்வதற்கான முதல் தகுதியாகும். அவரவர் தம் கருமைய அமைப்புக்கு ஏற்பட்ட, அவரவர்களுக்கு வந்து சேர வேண்டியவை கட்டாயம் வந்து சேர்ந்தே தீரும். அவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவன் கொடுக்க முடியாத ஒன்றை யாராலும் கொடுக்கவும் முடியாது. வாழ்க வளமுடன்...
🌌 *இன்றைய மூலிகை*
🌌 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌌 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌌 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌌 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment